GV Prakash: அட்டபிளாப்... கிங்ஸ்டனை நம்பி மண்ணை கவ்விய ஜிவி பிரகாஷ்! இதுவரை செய்த மொத்த வசூலே இவ்வளவு தானா?

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அவரது 25ஆவது படமான கிங்ஸ்டன் பாக்ஸ் ஆபிஸில் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் பற்றிய தகவல் இதோ...

Continues below advertisement

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் கிங்ஸ்டன். இது ஜிவி பிரகாஷின் 25ஆவது படம். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி, நிதின் சத்யா, சேத்தன், அழகம் பெருமாள், சாபூமோன், ஷா ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

Continues below advertisement

ஜிவி பிரகாஷ்:

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்திருந்தார். இது ஜிவியின் 25ஆவது படம் என்பதால், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஜிவியின் நடிப்பில் வந்த படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 2000க்கும் அதிகமான விஎஃப் எக்ஸ் காட்சிகளுடன் படமாக்கப்பட்டது.


கிங்ஸ்டன் கதைக்களம்:

முழுக்க முழுக்க மீனவர்களையும் கடலையும் மையப்படுத்திய இந்தப் படம் கற்பனை திகில் சாகசம் நிறைந்த படமாக வெளியாகியிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் கடற்கரையில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை அருகில் உள்ள ஒரு கிராமத்தின் முக்கிய வருமானமே மீன்பிடி தொழில் தான். ஆனால், கடல் சபிக்கப்பட்டதாகவும், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் ஒருபோதும் திரும்பி வருவதில்லை என்றும் வதந்தி பரவியுள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தான் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிங் துணிச்சலோடு கடலுக்கு தனியாக செல்ல முடிவு செய்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. இது போன்ற கதைகளை மையப்படுத்தி பல படங்கள் திரைக்கு வந்த போதிலும் இந்தப் படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. கலவையான விமர்சனத்தை பெற்ற இந்தப் படம் முதல் நாளில் ரூ.90 லட்சம் வரையில் வசூல் குவித்தது.


படம் வெளியாகி 2 வாரங்களை எட்ட உள்ள நிலையில்,  ரூ.5.50 கோடி மட்டுமே வசூல் எடுத்துள்ளது. 20 கோடி பட்ஜெட்டில் 3000 கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவான இந்த படம், இந்தியாவின் முதல் முதலில் கடலில் எடுக்கப்பட்ட சாகசப்படம் என பெருமைகளை பெற்றபோதும் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 

Continues below advertisement