மற்றொரு படத்தில்  கதாநாயகனாக நடிக்கிறார் குரு சோமசுந்தரம்.


தியாகராஜா குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலமாக  நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். பின் இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தற்போது  மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் குருசோமசுந்தரம். அண்மையில் பேட்டி ஒன்றில் தான் தற்போது நடித்துவரும் படங்கள் குறித்தான விவரங்களை பகிர்ந்துகொண்டார் குரு சோமசுந்தரம்.


இயக்குனர் தினகரன் இயக்கியிருக்கும் படத்தில்  தற்போது கதாநாயகனாக நடித்திருக்கிறாராம் குரு சோமசுந்தரம். சஞ்சனா நடராஜன் அவருக்கு இணையாக நடித்திருக்கிறார். இந்தப் படம் குறித்தான் அதிகாரப்பூர்வமானத் தகவல் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார் குரு சோமசுந்தரம். மேலும் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் செம பிஸியாக நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம். இயக்குனர்  சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படத்தில் நடித்துள்ளார். மேலும் ஆஷா சரத்துடன் இணைந்து இந்திரா என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் குரு. மோகன்லால் இயக்கியிருக்கும் பரோல் திரைப்படத்திலும் குனச்சித்திர கதாபாத்திரம் ஓன்றில் நடித்துள்ளாராம். தமிழில் ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளாராம். ஆனால் இந்தியன் 2 படம் குறித்து மெலும் தகவல்களை தெரிவ்க்க அவர் விரும்பவில்லை.


மேலும் தமிழ் நடிகர்கள் மலையாளத்தில் அதிக நடித்து வருவது குறித்து கேட்கப்பட்ட போது அது குறித்து பேசிய குரு சோமசுந்தரன் “ மொழிகளைக் கடந்த நடிகர்கள் தற்போது அனைத்து மொழிகளிலும் நடிப்பதை வரவேற்பதாகவும். மொழி என்கிற ஒன்றை சினிமா கடந்துவிட்டது என்றும் ஒரு படத்தின் கதாபாத்திற்காக வேறு மொழி நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார் .


ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் காளையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரம் தனது நடிப்பால் ரசிகர்களின் கவணத்தை ஈர்த்தவர். வெகுளியான  காளையன் கதாபாத்திரன் தனது மகனிடம் தனது குடும்பக் கதையைச் சொல்லும் போது “அப்பன ஏச்சுப் பூட்டனுங்க யா” என்று குரு சோமசுந்தரம் பேசிய வசனம் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்த குரு மன்னர் மன்னன் என்கிற வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.  நகைசுவை உணர்வுகளில் மட்டுமில்லாம உணர்வுப்பூர்வமான காட்சிகளுலு சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் குரு சோமசுந்தரம். மலையாளத்தில் . ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார் குரு. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்த மின்னல்  முரளி படத்தில் வில்லனாக நடித்தார். சூர்யா மணிகண்டன் நடித்த ஜெய் பீம் திரைப்படத்தில் எதிர் தரப்பு வக்கீலாக நடித்திருப்பார். அண்மையில் வெளியான யாத்திசைத் திரைப்படத்தில் நடித்திருந்தார் குரு சோமசுந்தரம்.