Guardins of the galaxy: கண்களை குளமாக்கும் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி டிரெய்லர்.. மாஸ் காட்டும் ஆடம் வார்லாக்

மார்வெல் (marvel) நிறுவனத்தின் கார்டியன்ஸ் ஆஃப்தி கேலக்ஸி வால்யூம் 3 (Guardians of the Galaxy Vol. 3) படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கிறிஸ் பிராட் நடிப்பில் உருவாகியுள்ள, கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் வால்யூம் 3 படத்திற்கான டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹை எவலியூஷனரி கதாபாத்திரத்தை வில்லனாக கொண்ட இப்படத்தில், ஆடம் வார்லாக் கதாபாத்திரம் முக்கிய பங்காற்ற உள்ளது. 

Continues below advertisement

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி:

உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மார்வெல் சினிமட்டிக் யூனிவர்சின் ஒரு பகுதியாக,  ஜேம்ஸ் கன் இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்களாக வெளியான, கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக, ஸ்டார் லார்ட் தலைமையிலான அந்த குழு, தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் இடம்பெற்றது. அதைதொடர்ந்து, கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படத்தின் இறுதி  பாகம், வரும் மே மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது.  எண்ட் கேம் சம்பவத்திற்கு பின் காணாமல் போன கமோரா கதாபாத்திரத்தை தேடி கண்டுபிடிப்பதோடு, ராக்கெட் கதாபாத்திரத்திரம் உருவாக்கப்பட்ட இடத்திற்கு செல்வது ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி குழுவினற்கு என, மார்வெல் நிறுவனத்தில் வரும் கடைசி திரைப்படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இரண்டாவது டிரெய்லர் வெளியீடு:

மூன்றாம் பாகத்திற்கான முதல் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், கமோரா - ஸ்டார் லார்ட் இடையே இருக்கும் பிரச்னை, ராக்கெட் கதாபாத்திரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது, ஹை எவலியூஷனரி கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன?, ஆடம் வார்லாக் - கார்டியன்ஸ் குழுவினர் இடையேயான மோதல் மற்றும் தங்களது குழுவினரை காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கும் கார்டியன்ஸ் குழு உறுப்பினர்கள் இடையேயான பாசம் என ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்த கதைக்களமாக விவரிக்கப்பட்டுள்ளது.

இறக்கப்போவது யார்?..

கடைசி பாகமான இந்த திரைப்படத்தில் கார்டியன்ஸ் குழுவை சேர்ந்த யாரேனும் ஒருவர் நிச்சயமாக, தங்களது நண்பர்களுக்காக உயிர் தியாகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி, முதல் டிரெய்லரை பார்த்தபொது டிராக்ஸ் அல்லது ராக்கெட் கதாபாத்திரத்தில் யாரேனும் ஒருவர் பலியாவர் என கருதப்பட்டது. ஆனால், இந்த இரண்டாவது டிரெய்லரை பார்க்கும்போது டிராக்ஸ் மற்றும் ராக்கெட் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களுமே கொல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பலம் வாய்ந்த ஆடம் வார்லாக் மற்றும் ஹை எவலியூஷனரி கதாபாத்திரங்களுடன், டிராக்ஸ் நேரடியாக மோதுவது போன்ற காட்சிகள் அவரது மரணத்தை உறுதிப்படுத்துகின்றன. ஜேம்ஸ் கன் திரைப்படத்தில் இருக்கக் கூடிய வழக்கமான காமெடி மற்றும் ஆக்‌ஷனை தாண்டி, இந்த திரைப்படத்தில் எமோஷ்னலுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரிலும் அதன் தாக்கத்தை ரசிகர்களால் உணர முடிகிறது.

இணையத்தில் டிரெண்டிங்:

டிரெய்லர் வெளியான இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதோடு, கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படத்தின் கடைசி பாகம் என்பதை குறிக்கும் விதமான, ஃபார் ஒன் லாஸ்ட் ரைட் என வரும் வசனத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola