சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் திருமண  கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது . சிலவற்றை பார்க்கும் பொழுது ஆட்டம் , பாட்டம் , கேளி , கிண்டல் என கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும் சிலவற்றை பார்க்கும் பொழுது அம்மா - மகள் ,  அப்பா- மகள் , தம்பி - அக்காள் என உறவுகளின் உணர்ச்சி ததும்பலாகவும் இருக்கின்றது. இந்தியாவில் திருமண கொண்டாட்டங்களுக்கு முன்பைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 






திருமணம்  மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் சற்று வித்தியாசமனாதும் உணர்ச்சிகள் மற்றும் உறவுகள்  நிறைந்ததும் கூட. தாங்கள் ஆசையாக வளர்க்கும் மகளை , மணமகன் வீட்டில் வாழ வைப்பதற்காக அனுப்பி வைக்கும் சம்பிரதாயம் இந்திய கலாச்சாரத்தில்தான்  காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. இது மணமகளுக்கும் , அவரது வீட்டாருக்கும் உணர்ச்சி மிக்க தருணம்தானே! என்றாலும் கூட  அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள் . தென்னிந்தியாவை காட்டிலும்  வட இந்தியாவில்  திருமணத்தை ஒரு வாரம் கொண்டாடுவார்கள் . நலங்கு, மருதாணி விழா , வரவேற்பு விழா, திருமண விழா , விருந்து என  ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  மணமகள் தனது சொந்த வீட்டை விட்டு , மணமகனின் வீட்டிற்கு குடியேறும் நிகழ்வை  'bidai ceremony' என அழைக்கின்றனர்.






அப்படித்தான் மணமகள் ஒருவர் தனது திருமண லெஹங்கா ஆடையுடன் , மணமகன் வீட்டிற்கு செல்ல தயாராகிறார். அவரை முழு அலங்காரத்துடன் கண்ட மணமகளின் பாட்டி , அவர் வீட்டை விட்டு செல்வதை நினைத்து விம்மி அழத்தொடங்குகிறார். உடனே அதை கண்ட மணமகள் , பதிலுக்கு அழாமல் தனது பாட்டியை கட்டிப்பிடித்து “ அழாதீங்க பாட்டி .. பக்கத்துலதான் இருப்பேன்..ஒரு ஃபோன் பண்ணுனா வரப்போறேன் “ என ஆறுதல் கூறுகிறார் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.