GPMuthu On kamal haasan: என்னது பூட்டு இல்லையா.. கமலை கதறவிட்ட ஜிபிமுத்து.. தரமான சம்பவம்! -வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் ஜிபி முத்துவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே நடந்த உரையாடல் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் ஜிபி முத்துவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே நடந்த உரையாடல் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. 

Continues below advertisement

 

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான்.

முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர். இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூட்யூபரான ஜிபி முத்து என அறியப்படும் ஜி. பேச்சி முத்து முதல் ஆளாக பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். இவர் கடந்த 2 சீசன்களாகவே பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பங்கேற்றுள்ளார். மேடையில் தோன்றிய அவர் தனது மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க வேண்டுமென விருப்பப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இதுவரை தான் குடும்பத்தை பிரிந்து இருந்ததில்லை என கூறி அவர் கண்கலங்க கமல் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பினார். இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து அறைக்குள் எப்படி செல்வது என தெரியாமல் திணறுகிறார். அவரை கமல் ஆசுவாசப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப வழி செய்கிறார். இந்த நகைச்சுவை நிறைந்த உரையாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola