தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ஜிபி முத்து தான் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் மக்களிடம் பிரபலமானார். இந்த பிரபலம் அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொண்ட ஜிபிமுத்துக்கு பிக்பாஸ் சீசன் 6 யில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.


இதனையடுத்து முதல் ஆளாக உள்ளே சென்ற ஜிபிமுத்து, மகனையும் குடும்பத்தினரையும் பார்க்க முடியாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறி, முதல் ஆளாக வெளியேவும் வந்து விட்டார். அவர் இருந்த வரை, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அடுக்கடுக்காக கண்டென்ட் கொடுத்து வந்தார்; ஆனால், அவர் போன பின்பு, அந்த வீடு சற்று கலை இழந்து காணப்படுகிறது என்றும் வைல்ட்- கார்ட் எண்ட்ரியில் மீண்டும் அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. 




 


ஜிபி முத்து சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்   ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில்  நடித்துள்ளார். அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், சன்னிக்கு பால்கோவா ஊட்டி விட்டு மகிழ்ந்தார். அந்த நிகழ்வு பட்டிதொட்டியெங்கும் பரவி வைரலானது; இதுபோக, ஜி.பி.முத்துவிற்கு, ஏகே 62 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இத்துடன், லவ் டூடே ப்ரோமோஷனுக்காக பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த அவர் அதே ஸ்டைலில் கடிதம் படித்து ட்ரெண்ட் ஆனார்; 


 




அதே பாணியில், அண்மையில் சென்னை கிருஷ்ணவேனி திரையரங்கில் நடந்த கனெக்ட் படத்தை பிரோமோட் செய்வதற்காக ஜிபி முத்து அங்கு வருகை தந்திருந்தார். அப்போது நயனும் விக்னேஷ் சிவனும் உட்பட கனெக்ட் படத்தை சேர்ந்த படக்குழுவினர் பலரும் அங்கு வருகை தந்தனர்; இந்த நிலையில் அங்கு நின்றிருந்த பவுன்சர்கள் ஜிபி முத்துவை மரியாதை குறைவாக நடத்தி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.


இந்த விஷயத்தை, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  ஜி.பி முத்து சோகத்துடன் மிகவும் சோகத்துடன் தெரிவித்திருக்கிறார்.   இது குறித்து அவர் கூறும் போது, “நிகழ்ச்சி நடத்தியவர்கள், என்னிடம் சொன்ன விதம் வேறு, அங்கு என்னை நடத்திய விதம் வேறு. நயன்தாரா, உங்களுடன் படம் பார்க்க ஆசைப்பட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால், என்னை வேறு எங்கேயோ உட்கார வைத்துவிட்டார்கள். நான் படத்தை பார்க்காமலேயே வந்துவிட்டேன். 


நயன்தாரவிற்கும் இதற்கும் எந்த சமந்தமும் இல்லை. பவுன்சர்கள் என்னை கேவலமாக நடத்திவிட்டார்கள். நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் அடிமட்டத்திலிருந்து வந்தவன். மீண்டும் என்னை கூப்பிட்டார்கள், ஆனால் மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்லி வந்துவிட்டேன்.” என்று அதில் அவர் பேசியிருக்கிறார்.