ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட படங்கள் மக்களிடம் பெரியளவில் பேசுபொருளாக மாறுகின்றன. இதில் பெரிய ஸ்டார்களின் படங்கள் மட்டுமில்லாமல் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்க்காத வெற்றியை பெறுகின்றன. 2025 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா , ரஜினியின் கூலி ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. முதலிடத்தில் இந்தி மொழிப் படம் சையாரா .
கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் 2025
இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்களில் கடந்த சில மாதங்கள் முன்பு இந்தியில் வெளியான சையாரா திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பாலிவுட்டில் தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில் மோகித் சூரி இயக்கத்தில் வெளியான சையாரா ஒரு ஒளிவிளக்காக அமைந்தது. ஆஷிகி 2 போன்ற ரொமாண்டிக் வெற்றிப்படங்களை இயக்கியவர் மோகித் சூரி. பெரிய ஸ்டார்களின் படங்களை நிராகரித்த மக்கள் இரு புதுமுகங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்றன. ஓடிடியில் வெளியான பிறகு படத்திற்கு ஹைப் கொடுத்து வெற்றிபெற வைத்துள்ளார்கள் என்றும் சில விமர்சனங்கள் எழுந்தன.
மூன்றாவது இடத்தில் கூலி
காந்தாரா திரைப்பட இரண்டாவதாகவும் ரஜினியின் கூலி திரைப்படம் மூன்றாவது இடம்பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கூலி திரைப்படம் வெளியானது. லோகேஷ் ரஜினி காம்போவுக்காக ஒரு வருடம் காத்திருந்தது ரசிகர்களுக்கு இப்படம் பெறுத்த ஏமாற்றமாய் அமைந்தது. ரஜினி , நாகர்ஜூனா செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் என அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தும் படத்தில் எந்த செளபினை சாஹிர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் சரியாகவே எழுதப்படவில்லை. சைன்ஸ் ஃபிக்ஷன் , ஆக்ஷன் என லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் பல முடிச்சுகளை போட்டு அதை அவிழ்க்காமலே விட்டுவிட்டார். அதிகம் எதிர்பார்க்கபப்ட்டது மட்டுமில்லை அண்மை காலத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்ப பட்டியலிலும் கூலி இடம்பெறலாம்.
முழு பட்டியல்
சாயாரா
காந்தாரா: சாப்டர் 1
கூலி
வார் 2
சனம் தேரி கசம்
மார்கோ
ஹவுஸ்ஃபுல் 5
கேம் சேஞ்சர்
மிஸஸ்
மஹாவதர் நரசிம்ஹா