தமிழ் சினிமாவில் புதிய பாதை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். இயக்கம் மட்டுமின்றி தன்னுடைய முதல் படத்திலிருந்தே நடிக்கவும் செய்துவருகிறார்.


இவர் சில வருடங்களுக்கு முன்பு இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.


அப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் திரையில் பார்த்திபன் உலாவவிட்டது அனைவரது புருவங்களையும் உயர செய்தது. அத்திரைப்படம் வசூல் ரீதியாக சரியான வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.




அதுமட்டுமின்றி தேசிய விருதையும் ஒத்த செருப்பு பெற்றது. இதனையடுத்து அவர் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கிவருகிறார். ஒத்த செருப்பில் ஒற்றை கதாபாத்திரத்தை மட்டும் வைத்து படம் எடுத்திருந்த பார்த்திபன், இரவின் நிழலை ஒரே ஷாட்டில் உருவாக்கியிருக்கிறார். மேலும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் பார்த்திபன் திருப்பதியில் இன்று தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. எதிர்க்கட்சிகள் சண்டை போட முடியாத அளவிற்கு சிறப்பாக ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.






இரவின் நிழல் விரைவில் வெளியாக இருக்கிறது. முன்னதாக படத்திற்கு பின்னணி இசை அமைப்பதற்கான பணியை தொடங்கியபோது படம் பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் வெகுவாக பாராட்டினார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Jai Bhim Movie: ஜெய் பீம் படத்தின் சாதனை.... ஐஎம்டிபியில் முதலிடம் பிடித்தது!