ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித், த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி - சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தான் 'குட் பேட் அக்லி' படத்தில் த்ரிஷா நடிக்கும் கதாபத்திரம் தொடர்பான வீடியோ ஒன்றை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

Continues below advertisement

அதில், த்ரிஷாவில் லுக்கை பார்க்கும் போது இதற்கு முன்னதாக 'மங்காத்தா' படத்தில் வரும் லுக் போன்று உள்ளது என்பதே ரசிகர்களின் கருத்து. தலையில் ஒரு கிளர்ச் மட்டுமே போட்டு, ஸ்டைலிஷான லுக்கில் பார்ப்பதற்கே செம்ம கியூட்டாக இருக்கிறார். படமும் அதே மாதிரியான ஒரு மாஸான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், லட்சுமி ராய், வைபவ், ஆண்ட்ர்யா, த்ரிஷா ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் தான் மங்காத்தா. அஜித்தின் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக மங்காத்தா இருந்தது. இந்த படத்தில் த்ரிஷா அஜித்தை வெறித்தனமாக காதலிக்கும் தோற்றத்தில் நடித்திருப்பார். அதே ரோலில் தான் இப்போது குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்திருக்கிறாரா? என்பது படம் ரிலீஸ் ஆன பின்னரே தெரியவரும்.

இந்த படத்தில் த்ரிஷாவின் பெயர் ரம்யா. இதை கூட ஆதிக், செண்டிமெண்ட் பார்த்து தான் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதிக் இயக்குனராக அறிமுகமான, 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் கயல் ஆனந்தியின் பெயர் ரம்யா. அதே போல் AAA படத்தில், தமன்னாவுக்கு ரம்யா என பெயர் வைத்திருப்பார். 'பஹீரா' படத்தில் அமைராவுக்கும் இதே பெயரை தான் சூட்டி இருப்பார். இவ்வளவு ஏன், விஷாலை வைத்து இவர் இயக்கி இருந்த, 'மார்க் ஆண்டனி' படத்தில் கூட நடிகை ரித்து வர்மாவுக்கு ரம்யா என்கிற பெயரை தான் வைத்திருப்பார். இப்போது இதே செண்டிமெண்ட், 'குட் பேட் அக்லி' த்ரிஷா பெயரிலும் தொடர்ந்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன், இந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ் ஆன, விடாமுயற்சி  திரைப்படம் தோல்வியை தழுவியநிலையில், 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.