டிராகன்


அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் டிராகன் . ஏ.ஜி.எஸ் என்டர்டெயினெமெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது மற்றும் சுதா கொங்காரா உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிக்கவுள்ள படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தையும் கைபற்றியுள்ளத்.


பெருசு 


கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் பெருசு. நிஹாரிகா , சுனில் , கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 


காந்தா


செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் , சமுத்திரகனி நடித்து வரும் படம் காந்தா. தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் பான் இந்திய படமாக இப்படம் உருவாகி வருகிறது. 


பைசன்


வாழை படத்திற்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் பைசன் . துருவ் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடிக்கும் நிலையில் அனுபமா பரவேஷ்வர் நாய்கியாக நடிக்கிறார். லால் , அமீர் , பசுபதி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 


குட் பேட் அக்லி






ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள பட குட் பேட் அக்லி. பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு , த்ரிஷா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி. வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் ஏப்ரம் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.


ரெட்ரோ


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இது தவிர்த்து சாய் பல்லவி நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் , நானி நடிக்கும் ஹிட் ஆகிய படங்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கின்றன.