வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. அசுரன் படத்தின் வெற்றிக்குப் பின் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியை  ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் இதற்கிடையில் வெற்றிமாறன் விடுதலை படத்தை கையில் எடுத்தார். வாடிவாசல் படம் 4 ஆண்டுகள் தாமதமானது.

4 ஆண்டுகள் காத்திருப்பு

ஜல்லிகட்டை மையப்படுத்திய படம் என்பதால் இப்படத்திற்கு நிறைய முன்னேற்பாடுகள் தேவையாக இருந்தன. முதலில் முழுக்க முழுக்க நிஜ ஜல்லிகட்டு களத்தில் இப்படத்தை வெற்றிமாறன் எடுக்க நினைத்தார். பின் அதன் ஆபத்துகளை உணர்ந்து பகுதி லைவாகவும் மீதியை சி.ஜியில் எடுக்க முடிவுக்கு வந்தார். வாடிவாசல் படத்திற்கு என்றே தனியாக அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் காளை ஒன்றையும் படக்குழு தயார் செய்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யா இப்படத்திற்காக தனியாக காளை ஒன்றையும் வளர்த்து அதனுடன் பயிற்சி எடுத்து வருகிறார்.

 

இதன் இடைபட்ட காலத்தில் சின்ன ஒரு படத்தை எடுத்துவிடலாம் என்று நினைத்த வெற்றிமாறனின் விடுதலை 2 பாகங்களாக நீண்டு 4 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது.

வாடிவாசல் படப்பிடிப்பு தொடக்கம்

விடுதலை 2 படத்திற்கு பின் வெற்றிமாறன் அடுத்த என்ன படத்தை இயக்கப்போகிறார் என்கிற கேள்வி பரவலாக இருந்து வந்தது. சூர்யா ரசிகர்கள் வாடிவாசல் படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இப்படியான நிலையில் தான் விடுதலை படத்தை தயாரித்த ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் தனுஷ் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.

இதனால் வாடிவாசல் படம் மொத்தமாக கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாடிவாசல் படத்தின் அரிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு. 

சூர்யாவுக்கு முன்னதாக வெளியான கங்குவா படம் பெரிய தோல்வியாக அமைந்தாலும் ரெட்ரோ , ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூர்யா45  ,தற்போது வாடிவாசல் என அடுத்தடுத்து படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகின்றன.