நடிகர் அஜித் குமார் நடிப்பில் 'Good Bad Ugly' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Good Bad Ugly:


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் நடித்து வெளியாகும் திரைப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விடா முயற்சி 2025- பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித் குமார் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதால் ரசிகர்களிடையே ‘குட் பேட் அக்லி’ பெரும் எதிர்பாப்பை ஏற்படுத்தியுள்ளது.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கியது. 






யோகி பாபு , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. தேவிஶ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை ஜி.வி பிரகாஷ் உருவாக்குகிறார்.


இந்தப் படத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் அவ்வபோது வைரலாகியது. பில்லா , மங்காத்தா படத்திற்கு பின் இப்படம் அஜித்தின் கரியரில் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி அஜித்தின் வெவ்வேறு லுக் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 


மகிழ் திருமேணி இயக்கும் விடாமுயற்சி படம் பல சிக்கல்களுக்கு பிறகு அஜர்பைஜான், துபாய் ஆகிய வெளிநாடுகளில் படப்பிடிப்பு செய்யப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், விடாமுயற்சி பற்றிய அப்டேட்கள் மட்டுமே கிடைத்தது. 2025- பொங்கள் வெளியீடு என்ரு அறிவிக்கப்பட்டாலும் தேதி தள்ளிவைக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செயதது.  விடாமுயற்சி அப்டேட்களுக்கு மட்டுமே ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், அதற்கு பிறகு தொடப்பட்ட படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


’குட் பேட் அக்லி’ வெளியீடு:


அஜித் குமார், த்ரிஷா இருவரும் வெகு நாட்களுக்கு பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்கள் இவர்கள் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருவரின் நடிப்பில் விடாமுயற்சி, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2025 ஏப்ரல் 10-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ வெளியாகும் என படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.