நயன்தாரா


நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை சமீபத்தில் ஒட்டுமொத்த திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நயன்தாராவின் வாழ்க்கையை மையப்படுத்தி நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடி படத்தின் காட்சிகளை பயண்படுத்த நடிகர் தனுஷ் அனுமதி கொடுக்காததால் நயன்தாரா அவரை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் அனுமதி இல்லாமல் இந்த ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டன. இதனால் நடிகர் தனுஷ் நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்  வரும் ஜனவரி 8 ஆம் தேதி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 


மேலும் இதே நாளில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பும் வழக்கப்பட இருக்கிறது. தனுஷூடனான பிரச்சனை முடிவுக்கு வரும் முன்பே நடிகை நயன்தாரா மற்றொரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். 


5 கோடி நஷ்ட ஈடு


நயன்தாரா பற்றிய ஆவணப்படத்தில் தமிழ் மலையாளம் என இரு மொழியிலும் அவர் நடித்த படங்களின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் சில காட்சிகளுக்கு அனுமதி பெற்றும் சில காட்சிகளுக்கு அனுமதி பெறாமலும் பயண்படுத்த பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தின் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் இதனால் அந்த படத்தின் உரிமம் உள்ளவர் 5 கோடி ரூபாய் கேட்டு நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


முறையாக அனுமதி கேட்டிருந்தாலே தயாரிப்பு நிறுவனம் ஒரு சிறிய தொகையை கேட்டிருப்பார்கள். ஆனால் அனுமதி கேட்காமல் படத்தின் காட்சிகளை பயண்படுத்தியதால் கடுப்பான சந்திரமுகி பட தயாரிப்பாளர் 5 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.