Good Bad Ugly: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். இவரது குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் வசனத்தை பேசிய அஜித்:
இந்த படத்தின் இடைவேளையில் நடிகர் அஜித் நண்பா.. ஐ எம் வெயிட்டிங் என்ற வசனத்தை பேசுவார். கத்தி படத்தில் நடிகர் விஜய் பேசும் வெயிட்டிங் என்ற வசனம் மிகவும் பிரபலம். மேலும் அஜித்தை விஜய் நண்பர் என்றே குறிப்பிடுவார்.
தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்கள் விஜய் மற்றும் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர்கள் இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதல் போக்கில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தவிர்க்குமாறு நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், இந்த மோதல் போக்கு நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ஒற்றுமையை வலியுறுத்தும் உச்ச நட்சத்திரங்கள்
இந்த நிலையில், சமீபகாலமாக விஜய் மற்றும் அஜித் இருவரும் அவரவர் படங்களில் மற்றவரின் வசனங்களையோ, பிஜிஎம் இசையையோ பயன்படுத்தி ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் மங்காத்தா படத்தில் அஜித்தின் காவலன் பட காட்சி காட்டப்பட்டிருக்கும்.
விஜய் அவரது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் போல என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அஜித்தின் நெருக்கமான நண்பரும், இயக்குனருமான வெங்கட்பிரபு இயக்கிய கோட் படத்திலும் கிளைமேக்ஸில் மங்காத்தா பின்னணி இசை ஒலிக்கப்பட்டிருக்கும். விஜய் தனது வாரிசு இசை வெளியீட்டு விழாவிலும் ஒரே தல என்றும் அஜி்த்தை பாராட்டியிருப்பார்.
நடிகர் அஜித்தும் துபாயில் நடந்த கார் பந்தய வெற்றிக்கு பிறகு அளித்த பேட்டியில் விஜய் வாழ்க.. அஜித் வாழ்கனு சொல்றீங்க.. நீங்க எப்போ வாழப்போறீங்க? என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார். ரசிகர்களின் மோதல் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காகவே விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது படங்களில் ஒருவரது வசனத்தை பேசி ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றனர்.
இனி மாறுவார்களா ரசிகர்கள்?
அதன் எதிரொலியாகவே இன்று வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்திலும் அஜித் விஜய்யின் ஐ அம் வெயிட்டிங் என்ற வசனத்தை பேசியுள்ளார். இது போல ரசிகர்களின் ஒற்றுமைக்காக இருவரும் தங்களது கடந்த கால படங்களில் இதை செய்து வருகின்றனர். நடிகர் விஜய் அரசியலில் முழு நேரமாக இறங்கிவிட்டதால் அவர் ஜனநாயகன் படத்துடன் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்குகிறார்.
இதன்பின்பு, ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதல் போக்கைத் தவிர்த்து நட்பு பாராட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.