அண்மையில் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்திரன், உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.
நடிகர் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தருக்கு தற்போது 67 வயதாகிறது. இந்நிலையில் டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வலி இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் இயக்குனர் டி ராஜேந்தர் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஆனாலும், மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறினார்.
சிம்பு அறிக்கை
இது குறித்து நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கையில், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்
முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் கமல்ஹாசன்
இதற்கிடையே சமீபத்தில் மருத்துவமனையில் இருக்கும் டி.ராஜேந்தரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று வெளிநாடு செல்லவிருக்கும் டி.ராஜேந்திரனை நடிகர் கமலஹாசன் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா செல்வதற்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி. ராஜேந்திரன் பேசியதாவது,
”எனக்கு உடல் நலக் குறைவு என்றவுடன் பிரார்த்தனை செய்த அனைத்து திரையுல ரசிகர்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும், எனது கட்சிக்காரர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், அவர்களின் அன்பிற்கும் நன்றி. என்னை மருத்துவமனையில் சந்தித்த எனது அரசியல் ஆசான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் புதல்வரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றி. எனது திரையுலக நண்பர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் நன்றி. மேலும் உங்களின் பிராத்தனையாலும் இறைவனின் அருளாலும் நான் பேசுகிறேன். எனக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை, எனது ரசிகர்கள், நண்பர்கள், ஈழத்து உறவுகள் அனைவருக்கும் எனது நன்றி எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்