தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இதையொட்டி ’தனியொருவன்’ இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் அவர் நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லூக் நேற்று வெளியானது. தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை சீரஞ்சீவியின் கொனிடலா ப்ரோடக்‌ஷன் கம்பெனி தயாரிக்கிறது. சீரஞ்சீவியின் பிறந்தநாள் பரிசாக படத்தின் மோஷன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமும் மோகன்ராஜாவும் ட்வீட் செய்திருந்தனர். இதையடுத்து நேற்று சரியாக ஆறு மணிக்குப் படத்தின் போஸ்டர் யூட்யூப்பில் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் வியூவ்ஸ்களைப் பெற்றிருந்தது. 











முன்னதாக சிரஞ்சீவியின் பிறந்தநாளுக்குத் திரையுலகத்தினர் பலர் திரண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.