ராமர் கோயில் திறப்பு விழாவை மக்கள் நேரலையில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. திரைகள் அகற்றப்பட்டதை எதிர்த்து நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பதிவு செய்துள்ளார்.
500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. 'பிரான் பிரதிஷ்டா' என்ற பெயரில் நடைபெறும் இந்த சடங்கில், பிரதமர் மோடி பங்கேற்று குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்கவுள்ளார். இந்த செயல்முறை பிற்பகல் 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 7,000 க்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை பொதுமக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையொட்டி பல மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ள சூழலில், மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாளை முதல் பொதுமக்கள் கோயிலுக்கு வந்த தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவை நாட்டில் இருக்கும் மக்கள் காணும் வகையில் பல்வேறு இடங்களில் எல்.ஈ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்பிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் எல்.ஈ.டி திரை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த திரைகள் போலீசார்கள் அகற்றப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ 22 ஜனவரி 24 அன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து அறநிலைத்துறை நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “ பஜனைகள் ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல், இனிப்புகள் வழங்குவது போன்றவற்றிற்காக மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்வதை நாங்கள் நேரில் காண விரும்புகிறோம். இது திமுகவின் மக்கள் விரோத செயலாகும்” என தெரிவித்துள்ளார்.
“ காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்.ஈ.டி திரைகள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். அல்லது நேரடி ஒளிபரப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி திரை உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை “வயித்திலே அடிப்பது” என்பார்கள்.