ஹாலிவுட் நடிகர்கள் கேல் கடாட், ரயன் ரெனால்ட்ஸ் மற்றும் ’தி ராக்’ ட்வைன் ஜான்சன் மூவரும் இணைந்து நடித்து உருவாகியிருக்கும் ’ரெட் நோட்டீஸ்’ திரைப்படம். இந்தப் படத்துக்கான ப்ரோமோ தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒருபகுதியாக கலிஃபோர்னியாவில் ஒரு திரையரங்கில் நடந்த ப்ரோமோவில் ரசிகருக்காக கிறுஸ்துமஸ் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார் ’தி ராக்’. 


கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நடிகரும் விவசாயியுமான ஆஸ்கர் ராட்ரிக்ஸ் என்பவர்தான் அந்த ரசிகர். இவர் அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் வீரர். திரையரங்கில் இவரது பெயரை சொல்லி அழைத்த தி ராக் அவர் மேடைக்கு வந்ததும் இறுக்க அணைத்துக் கொண்டார். 






ராக் தன்னை அழைத்து அன்பைப் பொழிந்ததை நம்ப முடியாமல் திகைத்து நின்று கொண்டிருந்த ஆஸ்கருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அதுதான் அவருடைய கிறுஸ்துமஸ் பரிசு. 


திரையரங்கில் இருந்து வெளியே அழைத்துச் சென்று ஆஸ்கருக்கு அன்பளிப்பாக ஒரு ட்ரக் ஒன்றை சர்ப்ரைஸாக வழங்கினார் தி ராக். 






திகைத்துப் போன ஆஸ்கர் ‘தி ராக்’ஐக் கட்டிப்பிடித்து அன்பைப் பெறுவதைவிட நான் பெரிய கிறுஸ்துமஸ் பரிசை எதிர்பார்க்கவில்லை. ஆனால் நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும் என்பது இன்று எனக்கு நிரூபனமாகியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.