இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரொமான்டிக் திரைப்படம் 'பாய்ஸ்'. இப்படத்தின் நடிகர் சித்தார்த்தின் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்தவர் இவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். குறிப்பாக ஜெயம் ரவி ஜோடியாக நடித்த 'சந்தோஷ் சுப்ரமணியம்' திரைப்படத்தில் ஹாசினியாகவும், சச்சின் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக ஷாலினி கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் இவரை கொண்டாடினர். முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ஜெனிலியா திடீர் திருமணத்தால் சினிமாவில் இருந்து விலகினார்.
திடீர் திருமணம் :
2012-ஆம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து வந்த நடிகை ஜெனிலியா திடீரென அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்த இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சினிமாவில் மீண்டும் நடிகை ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் 'வேத்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் முதல் முறையாக மராத்தி படத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியானது.
என் கணவர்தான் காரணம் :
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் நடிகை ஜெனிலியா கூறுகையில் "நான் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் எனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தான் காரணம் என்றும், அவர் என்னை திரைப்படங்களில் நடிக்க கூடாது என என்னை வற்புறுத்தியதாக மக்கள் மத்தியில் பரவலாக கருத்துகள் பரிமாறப்பட்டன. ஆனால் அது உண்மையல்ல. இன்று நான் மீண்டும் சினிமாவில் நடிக்க காரணமே என கணவர்தான். நீ மிகவும் நன்றாக நடிக்கிறாய். அப்படி இருக்கும்போது நீ ஏன் வீட்டில் உட்கார்ந்துகொண்டு இருக்கவேண்டும் என என்னை உற்சாகப்படுத்தி அவர் இயக்கிய 'வேத்' படத்தில் என்னை நடிக்க வைத்தார்" என்றார்.