சினிமா வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதானதல்ல. நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் சார்ந்த எந்த ஒரு வேலையானாலும், முதலில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில், மூன்று தலைமுறையாக அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சினிமா கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள். இந்த பட்டியலில் இடம் பிடித்தவர்கள் யார், ஒரு ரீவைண்ட்.
ஜெமினி கனேசன் – ரேகா – அபினய்
தமிழ் சினிமாவின் 'காதல் மன்னன்’ என கொண்டாடப்பட்ட நடிகர் ஜெமினி கனேசனின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் சினிமாவி தடம் பதித்துள்ளனர். அவரது மகள் ரேகா, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மூன்றாவது தலைமுறையாக, ஜெமினி - சாவித்ரி ஜோடிகளின் பேரன் அபினய் சினிமாவில் நடித்து வருகிறார். பிக் பாஸ் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அபினய், அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
முத்துராமன் – கார்த்திக் – கவுதம் கார்த்திக்
1960, 70களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாயநகராக இருந்தவர் முத்துராமன். அவரை அடுத்து, மகன் கார்த்திக், தமிழ் சினிமாவின் நவரச நாயகனாக கொண்டாடப்பட்டார். இரண்டு தலைமுறைகளாக ஹிட் நாயகர்களை கொண்ட இந்த குடும்பம், அடுத்து மூன்றாவது தலைமுறையாக கவுதம் கார்த்திக்கை கோலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறது
ரவிசந்திரன் – ஹம்சவர்தன் –தான்யா ரவிசந்திரன்
‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ என முதலாளியை கேள்வி கேட்ட ரவிசந்திரன், முன்னணி நடிகராகவும், துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்து பெயர் வாங்கியவர். அவரது மகன் ஹம்சவர்தன் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், மூன்றாம் தலைமுறையாக நடிக்க வந்திருக்கும் தான்யா தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர், ரவிசந்திரனின் மகன் ஸ்ரீராமின் மகளாவார்.
வினோத் ராஜ் – விக்ரம் – த்ருவ் விக்ரம்
கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் வினோத் ராஜ். இவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவின் ‘உழைப்பாளி’ நடிகர் என பெயர் வாங்கிய விக்ரமின் தந்தைதான் இவர். இந்த இரண்டு தலைமுறை நடிகர்களையும் அடுத்து, த்ருவ் விக்ரம் கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துவிட்டார்.
சிவாஜி கனேசன் – பிரபு – விக்ரம் பிரபு
சிவாஜி கனேசன். இவருக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். அவரது மகன் பிரபு. பெரிய நட்சத்திரத்தின் மகன் என்பதால் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடிக்காமல், தன்னுடைய சிறப்பான நடிப்பால் இன்று சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக, மகன் விக்ரம் பிரபு களமிறங்க, தொட்டதெல்லாம் ஹிட்டாகவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்