திரையுலகில் அனைவருக்குமே எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அங்கீகாரம் பெற பல ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு உடனே க்ளிக்காகிவிடும்.


அப்படி முதல் படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை கிரண். அதை தொடர்ந்து தமிழ் படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். 




இயக்குனர் சரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான 'ஜெமினி' திரைப்படத்தில்  விக்ரம் ஜோடியாக அறிமுகமான நடிகை கிரண் மார்க்கெட் ஒரே படத்தில் பல மடங்கு எகிறியது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித், கமல், சரத்குமார், பிரஷாந்த், விஜய், விஜயகாந்த், அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தார். அதிலும் குறிப்பாக வில்லன், வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன.


மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் குறைய அம்மா கேரக்டர், மாமியார் கேரக்டர், ஐட்டம் பாடல் என நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நடிப்பதில் இருந்து விலகி சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். இருப்பினும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த கிரண் எக்கச்சக்கமான புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். அதனால் ஒரு சில சமயங்களில் சர்ச்சையிலும் சிக்கினார். 



சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கிரண்தான் சினிமாவை விட்டு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஒதுங்கி இருந்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் என்னுடைய காதலன் சொன்னதை கேட்டு சினிமாவில் இருந்து விலகினேன், அதுதான் நான் செய்த பெரிய தவறு என்பதை பிறகு தான் உணர்ந்தேன்.


பின்னர் என்னுடைய காதலுனும் என்னை விட்டு பிரிந்துவிட்டான். அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டு பலர் என்னை அட்ஜஸ்ட் செய்ய அழைத்தார்கள். 


எனக்கு வந்த பல நல்ல வாய்ப்புகளை நான் காதலித்து வந்ததால் தட்டி கழித்து விட்டேன். சினிமாவில் போக்கஸ் இல்லாமல் போனது. அப்படி நான் இழந்த வாய்ப்பு தான் 'கில்லி' படம். விஜய்யின் ஜோடியாக 'கில்லி' படத்தில் த்ரிஷா நடிக்க முடியாது என சொன்னதால் அந்த வாய்ப்புக்கான அழைப்பு எனக்கு வந்தது.


ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய காதல் கண்ணை மறைத்துவிட்டது. பல நல்ல படங்கள் வந்தும் அதில் நான் அக்கறை காட்டாமல் போய்விட்டேன். 


அதனால் என்னுடைய அனுபவத்தின் மூலம் நான் கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால் சினிமா துறைக்கு வந்தால் தயவு செய்து காதலில் விழாதீர்கள். முதலில் சின்சியரா வேலையை பாருங்க. அதற்கு பிறகு காதல் செய்து கொள்ளலாம்" என தான் இழந்த வாய்ப்புகள் குறித்து மனவேதனையுடன் பேசி இருந்தார் நடிகை கிரண்.