ஆறு வில்லன்களுடன் மாஸ் காட்டவிருக்கும் இளைய தளபதி விஜய்... தளபதி 67(Thalapathy 67)


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடித்த 'விக்ரம்' என்ற ஆல் டைம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது தனது அடுத்த படமான 'தளபதி  67' படத்தின் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - இளைய தளபதி விஜய் - இசையமைப்பாளர் அனிருத் - தயாரிப்பாளர் லலித் குமார் கூட்டணி மீண்டும் தளபதி 67 படம் மூலம் மீண்டும் இணைகிறார்கள். 


 



விஜயுடன் திரையை பகிரும் கௌதம் மேனன் :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் மாஸ் நடிகர் விஜயுடன் திரையை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்ற புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆனால் சில கரணங்கள் அவருக்கு பதிலாக செம்பன் வினோத் ஒப்பந்தம் ஆனார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை லோகேஷ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் கௌதம் மேனன் இணையுள்ளார் என்ற தகவல் யூகமாக உள்ளது. அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. 


 






ஆறு வில்லன்கள் :


தளபதி 67 படத்தின் திரைக்கதை பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். மேலும் இந்த படத்தில் ப்ரித்திவிராஜ் சுகுமாரன், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத் என மொத்தம் ஆறு வில்லன்கள் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஹீரோயின்களாக சமந்தா மற்றும் திரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 


 






மன்சூர் அலிகான் ரசிகர் லோகேஷ்:


லோகேஷ் கனகராஜ் நடிகர் மன்சூர் அலிகானின் உடல்மொழி, மாடுலேஷனின் மிக பெரிய ரசிகர் என்பதால் அவருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதையொத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கியதும் தளபதி 67 படத்தின் ஹாட் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இந்த திரைப்படமும் நிச்சயம் ஒரு திரை விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.