நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானால் நிகழ்ந்த மாற்றம் குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தகவல் தெரிவித்துள்ளார். 






சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.






எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 4 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடந்து நேற்று படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்பட்ட ஒன்று “மல்லிப்பூ” பாடல். கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை  மது ஸ்ரீயின் மயக்க வைக்கும் குரலால் அனைவரையும் பாடல் கவர்ந்துள்ளது. ஒருவகையில் படம் பார்க்க அனைவரையும் தூண்டும் விஷயமாகவும் அது அமைந்துள்ளது. 






ஆனால் இப்பாடலுக்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. அதன்படி படத்தின் திரைக்கதையை கௌதம் மேனன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய போது கதைப்படி மல்லிப்பூ பாடல் அங்கு இல்லை. இந்த இடம் நன்றாக இருக்கிறது. ஒரு அழகான பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார். அதனால் நான் அந்த சீனை பாட்டுடன் எழுதினேன் என தெரிவித்துள்ளார்.