விரைவில் "டும் டும் டும்" கொட்ட போகும் கோலிவுட் லவ்வர்ஸ் யார்... சஸ்பென்ஸ் வெயிட்டிங்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ‘மிஸ்டர். சந்திரமெளலி, ‘ தேவராட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்தாக ‘பத்து தல’ படம் வெளியாக உள்ளது.
மஞ்சிமா மோகன் சினிமா பயணம்:
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானவர் மஞ்சிமா மோகன். தமிழில் கெளதம் மேனன் இயக்கிய “அச்சம் என்பது மடமையடா” படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து “ இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’, ‘ துக்ளக் தர்பார்’, ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விரைவில் திருமணம் :
‘தேவராட்டம்’ படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். அந்தப்படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று பேசப்பட்டது. மஞ்சிமா மோகனின் பிறந்த நாள் அன்று கௌதம் கார்த்திக் தங்கள் இருவரின் உறவை சற்று உறுதிப்படுத்தி இருக்கலாம். அதனால் அவர் மஞ்சுளாவை மோமோ என்று செல்லமாக அழைத்திருக்கலாம். இருவரும் இதுவரையில் தங்களது உறவை பற்றி வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கௌதம் கார்த்திக் விரைவில் நடைபெறும் என்பதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.
பத்து தல:
நடிகர் சிம்பு உடன் "பத்து தல" திரைப்படத்தில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு "மிக விரைவில் நம்பிக்கையுடன்"என்று புன்னகையோடு பதிலளித்துள்ளார்.
பெற்றோர் சம்மதம்:
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்றதாகவும் விரைவில் திருமணம் நடத்த இரு வீட்டாரும் உற்சாகமாகி உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.