Just In





'’என் அம்மா அப்பாவுடனான கடைசிப் பயணம்’’: நடிகர் தேவயானி பகிர்ந்த சோகக் கதை
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது குடும்பப் புகைப்படம் ஒன்றைக் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்சினிமாவில் குடும்பப்பாங்கான ஹீரோயின்கள் என்கிற ஒரு ஜானரில் நீண்டகாலம் நீடித்தவர் நடிகர் தேவயானி.இயக்குநர் ராஜகுமாரனைத் திருமணம் செய்த பிறகு மெகா தொடர்களில் நடிக்கத் தொடங்கிய இவர் கோலங்கள் சீரியல் மூலம் பட்டித்தொட்டி அனைத்தும் ரீச் ஆனார்.இவர் நடிகர் நகுலின் சகோதரி.
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது குடும்பப் புகைப்படம் ஒன்றைக் குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், ‘இது எனக்கு மறக்கமுடியாத பயணம்.எனது அம்மா அப்பாவுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் ஒன்றாகப் பயணித்தோம்.நகுல் அவரோட மனைவியுடன் வந்திருந்தார். எல்லோரும் மும்பை போனோம்.மும்பை நான் பிறந்த ஊர். துரதிர்ஷவசமாக நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பயணித்த கடைசி பயணமும் அதுதான். அதன் பிறகு அம்மா அப்பா இரண்டு பேருமே இறந்துட்டாங்க.’ என சோகத்துடன் பகிர்ந்தார்.
நடிகர் நகுல் மற்றும் அவரது இணையர் சுர்பிக்கு அண்மையில்தான் இரண்டாவது குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.