சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'கங்குபாய் கதியாவாடி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட முக்கியப் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படமானது ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியது. ஆனால் பிப்ரவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.






25 ஆண்டுகால திரைப்பயணத்தை முடித்திருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்தாவது படம் கங்குபாய் கத்தியவாடி ஆகும். இந்தப் படத்தை அவரே தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படமானது 72-ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கங்குபாய் கத்தியவாடியில் ஆலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


 



மும்பையில் பாலியல் தொழிலாளியாக இருந்த ஒரு பெண் எப்படி கேங்ஸ்டார் ஆனார் என்பதை மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்கிற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கங்குபாய் கத்தியவாடி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் காட்சியமைப்புகளும், பின்னணி இசையும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆலியா பட்டின் நடிப்பை ட்ரெய்லரில் பார்த்த பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.






மேலும், மேடை ஒன்றில் ஹிந்தி பேசும் ஆலியா பட் அந்த காகிதத்தை கிழித்து எறியும் காட்சி குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது.  தற்போது இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண