பஞ்சதந்திரத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்






கமல்ஹாசனின் பஞ்சதந்திரத்தில், “பெத்த கல்லு பெத்த லாபம்” என்ற வசனத்தை அடிக்கடி பேசும் சஞ்சீவ் ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கைகாலா சத்தியநாராயணா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் உடல்நல பாதிப்பால் காலமானார்; இந்தநிலையில், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கேங்க்ஸ்டா பாடல் வரிகளை வெளியிட்ட படக்குழுவினர்


துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கான ஹிண்ட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்தார். கேங்ஸ்டா என்ற ஹேஷ்டாகை குறிப்பிட்டு, அத்துடன் சிங்கபூரை சேர்ந்த பாடகரான சபீரையும் டேக் செய்திருந்தார். இதன் மூலம் அப்பாடலை சபீர் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. இந்த பாடல் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.






இந்தநிலையில், துணிவு படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் , “ இதுதான் கேங்ஸ்டா பாடலின் வரிகள். இதை படியுங்கள். மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். வரும் 25 ஆம் தேதி இப்பாடலை கேட்டு மகிழுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


பத்து தல படத்திற்கான டப்பிங்கை முடித்த கெளதம் கார்த்திக்


சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா பத்து தல என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


கர்நாடகா மாநிலம், பெல்லாரி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று, ஒருவழியாக வெற்றிகரமாக படப்பிடிப்பு நிறைவடைந்தது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்றளவும் பத்து தல ரிலீஸ் தேதி குறித்த எந்ததகவலும் வரவில்லை.




தற்போது, அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கெளதம் கார்த்திக், பத்து தல படத்திற்கான டப்பிங் பணியை முடித்துள்ளார். கெளதம் கார்த்திற்கும் மஞ்சிமாவிற்கும் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு எப்போது ?


வாரிசு படம் வருகிற பொங்கலையொட்டி வெளியாகிறது. இப்படத்தில் இருந்து  ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் டிசம்பர் 24 ஆம் தேதியான நாளை ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.






இதனிடையே விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேரலை செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு ஆடியோ நிகழ்ச்சியை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்குகிறார்; மேலும் இந்நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பாக வரும் ஜனவரி 1 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாரா கமல்?




தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 வரும் ஜனவரி 2023ல் நிறைவு பெறவுள்ளது. எனவே பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிந்த பிறகு கமல்ஹாசனின் விலகல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளார்கள் கமலுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கவும் தயாராக இருந்தாலும், அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் டிஆர்பியும் மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், அவருடைய நேரத்தையும் கவனத்தையும் நடிப்பில் செலுத்த விருப்பப்படுவதாக தெரிகிறது.