Cinema Round-up : கேங்ஸ்டா பாடல் வெளியீடு முதல் வாரிசு ஆடியோ விழாவில் நடந்த தள்ளு முள்ளு வரை.. இன்றைய சினிமா ரவுண்ட்-அப்!

வாரிசு மற்றும் துணிவு படத்தின் வெளியீட்டையொட்டி, அப்படத்தின் குழுவினர் அடுத்தடுத்து தகவல்களை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.

Continues below advertisement

வெளியானது கேங்ஸ்டா பாடல்

Continues below advertisement

துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிளான கேங்ஸ்டா பாடலை படக்குழு நேற்று மாலை 7 மணிக்கு வெளியிட்டது. சிங்கப்பூரை சேர்ந்த பாடகரான சபீர் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை,  AK ஆந்தம் என இசையமைப்பாளர் ஜிப்ரான் குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடந்த தள்ளு முள்ளு 

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் சிலர், அங்குள்ள இருக்கைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால், தற்போது சேதமான இருக்கைகளின் கணக்கு மதிப்பீடு நடந்து வருகிறது என்றும் அதற்கான நஷ்ட ஈடை வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம், வசூல் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காதலரை அறிமுகப்படுத்திய ரகுல்ப்ரீத் சிங்

பிரபல நடிகை ரகுல்ப்ரீத் சிங், தனது காதலன் குறித்த அன்பு பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார். தனது காதலன், ஜாக்கி பக்னானியின் பிறந்தநாளையொட்டி, அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரித் சிங். 

ரகுல் ப்ரீத் சிங்கின் பதிவிற்கு, அவரது ரசிகர்கள் பலர் லைக்ஸை அள்ளி குவித்து வருகின்றனர். பிரபலங்கள் உள்ளிட்ட பலர், ரகுலின் காதலர் ஜாக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமெண்டும் செய்து வருகின்றனர். 

பிரபலங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்து 

உலகம் முழுவதும் இன்று, கிறிஸ்துமஸ் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக பிரபலங்களும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விக்னேஷ் சிவன் நயன் தாரா , ஐஸ்வர்யா ராய், சதா, ஸ்ரேயா சரண், ரம்யா பாண்டியன், ராஷ்மிகா மந்தனா, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன், ஜனனி ஐயர், தர்ஷா குப்தா போன்ற பல பிரபலங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தனலட்சுமி 


கடந்த  வாரம் ரச்சித்தா, மைனா நந்தினி, விக்ரமன், ஷிவின், கதிரவன், அஸிம், தனலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யபட்டனர்.
குறைந்த ஓட்டுக்களை பெற்று, தனலட்சுமி கடைசி இடத்தில் இருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola