பிரபல பாலிவுட் நடிகர் ஜாக் க்ளீசன் (Jack Gleeson) மிகவும் எளிமையான முறையில் தனது காதலியை திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரின் எளிமையான திருமணம் :
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் Jack Gleeson . இவருக்கு தற்போது 30 வயதாகிறது. இவர் ஜார்ஜியாவில் உள்ள புகழ்பெற்ற தேவாலயமான Glenn Church இல் தனது நீண்ட நாள் காதலி ரொய்சின் ஓ'மஹோனியை ( Róisín O’Mahony) திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அலப்பறை இல்லாமல் அமைதியான முறையில் , நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை திருமணத்தை நடத்தி வைத்த தேவாலய பாதிரியார் ஃபாதர் பாஸ்டி லிஞ்ச் க்ளென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து "மிகவும் எளிமையான, பிரார்த்தனை மற்றும் கண்ணியமான திருமண விழா" என குறிப்பிட்டிருந்தார்.
எளிமையாக நடத்த இதுதான் காரணம் :
திருமணத்தில் மணமகன் ஜாக் க்ளீசன் (Jack Gleeson) பச்சை நிற சட்டையும் சாம்பல் நிற பேன்ட்டையும் அணிந்திருந்தார். அதற்கு மேட்ச் செய்யும் வகையில் பழுப்பு நிற லோஃபர் வகை காலணிகளையும் அணிந்து எளிமையாக காட்சியளிக்கிறார். அதே நேரம் மணமகள் பல வண்ணங்களில் மிளிரும் வெள்ளை நிறத்தாலான ஆடையை அணிந்திருந்தார். இவ்வளவு பெரிய நடிகர் ஏன் இவ்வளவு எளிமையாக திருமணம் செய்துக்கொண்டார் என நீங்கள் கேட்கலாம் Glenn Church , ஜாக் க்ளீசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான ஒரு தேவாலயமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவாலயத்தில் அதீத நம்பிக்கைகளும் , மகிழ்ச்சியான நினைவுகளும் இங்கே இருக்கிறது அதனால் திருமணத்தை எளிமையான முறையில் முதலில் இங்கு வைத்துவிட்டு , பின்னர் இங்கிலாந்தில் நட்சத்திரங்கள் சூழ பிரம்மாண்டமான முறையில் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்களாம் காதலர்கள்.
இப்படி ஒரு நடிகரா ?
திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார் கூறும் பொழுது , எங்கள் சர்ச்சில் அனைவருக்கும் ஜாக் க்ளீசனை தெரிந்திருந்தது. அவர் அனைவரிடம் அத்தனை எளிமையாக பழகினார். அவர் செயல்களில் எவ்வித செயற்கையும் இல்லை. இயல்பாக இருந்தார் .நான் அவரைச் சந்தித்தபோது, நம் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் அறிந்திருப்பது போல் இருந்தது என்றார்.பிரபலமான ஹாலிவுட் நடிகராக இருந்தாலும் ஜாக் க்ளீசன் (Jack Gleeson) அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் எதிலும் ஆக்டிவாக இல்லை என்பதும் கூடுதல் தகவல்