கர்நாடகாவில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை திட்டமிட்டபடி நடத்தலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூரு இத்கா மைதானத்தில் விழாவை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அதை தொடர்ந்து தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இரவில் நடைபெற்ற அவசர வழக்கின் விசாரணையின்போது, பெங்களூரு இக்தா மைதானம் யாருக்கு சொந்தம் என்ற தீவிர பிரச்னை ஹூப்ளி வழக்கை பொறுத்தவரை எழவே இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு பொறுந்தாது என நீதிபதி அசோக் எஸ். கினாகி தெரிவித்துள்ளார்.
"இது (ஹுப்ளி மைதானம்) கார்ப்பரேஷனின் சொத்து. கார்ப்பரேஷன் தகுந்ததாகக் கருதும் அனைத்தையும் செய்ய முடியும். அவர்கள் பிரார்த்தனை செய்ய இரண்டு நாட்கள் உள்ளன. ரம்ஜான், பக்ரித் போன்றவற்றிலும் நிச்சயமாக தலையிட முடியாது" என நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னதாக, இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உள்ளாட்சி அமைப்பு செவ்வாய்கிழமை அனுமதி அளித்திருந்தது.
பெங்களூருவில் இருந்த 400 கிமீ தொலைவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் முன்பிருந்த நிலையே தொடரும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அஞ்சுமன்-இ-இஸ்லாம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து வக்பு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முன்பிருந்த நிலையே தொடரும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏஎஸ் ஓகா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, விநாயக பூஜையை வேறு இடத்தில் நடத்தலாம் என அறிவுறுத்தியது.
2.5 ஏக்கர் நிலத்தின் உரிமை குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த நீண்ட வாதங்களின் போது, வக்ஃப் போர்டு வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டதால், அந்த நிலத்தில் வேறு எந்த சமூகத்தினரின் மத நிகழ்வும் நடைபெறவில்லை என்று வாதிட்டது.
"திடீரென 2022-ல், அது சர்ச்சைக்குரிய நிலம் என்றும், இங்கு விநாயக சதுர்த்தி விழாவை நடத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள்" என்றும் தெரிவித்தது.
அப்போது, மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம், "ஈத்கா மைதானத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பு நடந்திருக்கிறதா?" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தற்போது நிகழ்வை நடத்த அதன்அடிப்படையில் எல்லாம் எதிர்க்க முடியாது என அவர் பதில் அளித்தார்.