கேம் சேஞ்சர்:


'இந்தியன் 2' படத்தின் தோல்விக்கு பிறகு, இயக்குநர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ராம் சரண் அப்பா மற்றும் மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.


இந்தியன் 3:


இந்தப் படம் ஷங்கருக்கு திருப்பு முனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தப் படத்திற்கு பிறகு இந்தியன் 3 படத்தையும் இயக்குநர் ஷங்கர் கையில் எடுக்க உள்ளார். இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் கதை குறித்து தகவல் ஷங்கரே சமீபத்தில் கொடுத்த கூறியிருக்கிறார்.




வேள்பாரி:


கேம் சேஞ்சர் படத்தின், ரிலீசுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ஷங்கர் புதிய படம் குறித்து கூறியிருக்கிறார். அதாவது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த,  வேள்பாரி திரைப்படம் தான் இது . இது குறித்து ஷங்கர் பேசும் போது, இது என்னுடைய கனவு படம். இந்தப் படத்தின் கதைகள் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 1, 2, 3 பாகங்களாக உருவாக இருக்கிறது. அதோடு, பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்படும். இந்தப் படத்திற்கான நடிகர், நடிகைகள் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. ஆசியரியர் சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்படும். இது பாரியின் வரலாற்றை எடுத்துரைத்தது. இந்த நாவலை கொண்டு தான் ஷங்கர் தனது புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்தியன், போன்ற படங்களை இயக்கியுள்ள ஷங்கர்... ஒரு வரலாற்று நாவலை எடுத்தால் அது எப்படிப்பட்ட ஒரு பிரமாண்ட படைப்பாக இருக்கும் எனபதை சொல்லவா வேண்டும். கண்டிப்பாக கங்குவா தவற விட்ட 2000 கோடியை ஸ்கெட்ச் போட்டு தூங்குவார் ஷங்கர் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த ஆண்டு இந்தியன் 3 எடுத்து முடிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு 'வேள்பாரியின்' பணிகள் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.