இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது தற்போது வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

கேம் சேஞ்சர்: 

 ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் அஞ்சலி நடிப்பில்எஸ் ஷங்கரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான கேம் சேஞ்சர் , பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல்: 

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் சோலோ ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் என்பதால், 'கேம் சேஞ்சர்' பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Continues below advertisement

ஆனால் முதல் நாளே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் அமோகமாக இருந்தது. முதல் நாளில் 'கேம் சேஞ்சர்' படம் உலகம் முழுவதும் 186 வசூல் செய்துள்ளது. இந்தப் படம் 223 கோடி ஷேர் வசூல் செய்தால் பிரேக் ஈவன் இலக்கை எட்டிவிடும். இந்த வார சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: Game Changer Review: ஃபார்முக்கு வந்தாரா ஷங்கர்? நடிப்பில் மிரட்டிய ராம் சரண்.. கேம் சேஞ்சர் முழு விமர்சனம் இதோ

இதற்கு முன்னால் ராம் சரண் மற்றும் அவரது அப்பாவுடன் சேர்ந்து நடித்த ஆச்சார்யா படுதோல்வியை அடைந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தான் பெரிதும் நம்பி இருந்த நிலையில் படத்திற்கு தற்போது நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. ஆந்திர மற்றும் தெலங்கானாவில் மகர சங்கராந்தி விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: Vishal Health: விஷாலின் இந்த நிலைக்கு அவரு தான் காரணம்: குடிப்பழக்கம் கிடையாது: விஷாலின் நண்பர் ராஜா கண்ணீர்!

இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை  அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தெலுங்கு மற்றும் ஜீ மூவீஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.