ஜி.வி.பிரகாஷ் :


கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் . இதுவரையில் கிட்டத்தட்ட 90 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் கதாநாயகனாக நடிப்பது ஒன்றும் கோலிவுட்டிற்கு புதிதல்ல. அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷிற்கு ரசிகர்கள் முதல் படத்திலேயே அங்கீகாரம் கொடுக்க துவங்கினர் .






”விமர்சனம் பண்ணாங்க”


 முதன் முதலாக இசையமைக்க வந்த காலக்கட்டத்தில் உறவினர் (ஏ.ஆர்.ரஹ்மான்) உதவியால் திரைக்கு வந்ததாக விமர்சிக்கப்பட்டேன் என கூறும் ஜி.வி.பிரகாஷ். ஆயிரத்தில் ஒருவர் திரைப்படத்திற்கு பிறகுதான் என்னை சீரியஸாகவே எடுத்துக்கொண்டார்கள் என்கிறார். இப்போது என்னை கொண்டாடுகிறார்கள் அதற்கு  90 படங்கள்   தேவைப்பட்டிருக்கிறது என்கிறார்.







அடித்தட்டு இளைஞராக நடிக்க பிடிக்கும் :


ஜி.வி.பிரகாஷின் பெரும்பாலான படங்களை பார்த்தோம் என்றால் அதில் சாதாரண  அடித்தட்டு இளைஞராகத்தான் ஜி.வி நடித்திருப்பார். அது குறித்து விளக்கமளித்த ஜி.வி.பிரகாஷ் “நான் லோவர் மிடில் கிளாஸ்ல இருந்துதான் வந்தேன். என் அப்பா லோவர் மிடில் கிளாஸ்தான். என்னை அதோட எளிமையா பொறுத்திக்கொள்ள முடியும்.  நான் என் கதாபாத்திரங்களையும் அப்படியாகத்தான் தேர்வு செய்வேன். எனக்கு அந்த மக்களின் பிரச்சனைகளை பேசும் எளிமையான கதாபாத்திரம்தான் பிடிக்கும்.” என்றார்.






இசை , நடிப்பு பேலன்ஸ்:


15 வருடங்களாக இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பிற்காக  அதை தியாகம் செய்யவில்லை. இரண்டிலேயும் சமமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். இது எப்படி சாத்தியமாகிறது என கேட்டபோது , அதற்கு காரணம் பயிற்சிதான் என்கிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் இசை அமைக்க வந்த பொழுது வேண்டுமென்றால் இப்படியான தயக்கம் இருந்திருக்கலாம். இப்போது எனக்கு பழகிவிட்டது அதனால் இரண்டையும் பேலன்ஸ் செய்வது கடினமானது அல்ல  என்கிறார்.