ஜி.வி. பிரகாஷ் சைந்தவி
தமிழ் சினிமாவில் மிக சீனியர் காதல் ஜோடி ஜி.வி பிரகாஷ் மற்றும் சந்தவி. தங்கள் பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். 24 ஆண்டுகாலம் சேர்ந்து பயணித்த ஜி.வி சந்தவி இந்த ஆண்டு மே மாதம் தங்கள் விவாகரத்தை அறிவித்தார்கள். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு அவதூறுகள் பரவின. ஆனால் எல்லாம் அவதூறுகளை மறுத்து இருவரும் பரஸ்பரம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்." எங்கள் இருவரின் நலனுக்காக இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. எங்கள் பள்ளி காலத்தில் இருந்து நானும் ஜி.வி பிரகாஷும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறோம். இனிமேலும் எங்களின் இந்த நட்பு தொடரவே செய்யும்” என்று சைந்தவி கூறினார்.
மேடையில் சேர்ந்து பாடிய ஜி.வி சைந்தவி
ஜி.வி பிரகாஷ் இசைக்கும் சைந்தவியின் குரலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஜி.வி இசையில் சைந்தவி பாடிய யாரோ இவன் , பிறை தேடு ஆகிய பாடல்கள் ரசிகரகளின் காதல் கீதங்கள். விவாகரத்திற்கு பின் மறுபடியும் இந்த காம்போ இணையுமா என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. சமீபத்தில் அமரன் படத்தில் ஜி.வி இசையில் சைந்தவி ஒரு பாடலை பாடியிருக்கலாம் என பலர் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தார்கள்.
அந்த குறையை தீர்க்கும் வகையில் கான்சர்ட் ஒன்றில் ஜி.வி மற்றும் சைந்தவி சேர்ந்து பாடியுள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் பியானோ இசைத்தபடி இருக்க சைந்தவி பிறை தேடு பாடலை பாடுகிறார். அப்படியே அந்த பாடலில் ஜி.வி சேர்ந்து பாடுகையில் ரசிகர்கள் ஆர்வாரம் செய்து கொண்டாடினர். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உணர்ச்சிவசமாக பதிவிட்டு வருகிறார்கள்.