தமிழ் சினிமா உலகில் உள்ள பெரும்பாலான நடிகைகள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு ரசிகர்களுக்கு யாருக்கும் தெரியாமல் உதவிகளை செய்து வருகின்றனர். இதனை ஒருமனிதன் சகமனிதனுக்குச் செய்யும் உதவியாக கருதினாலும் அவை வெளி உலகிற்கு தெரிவதில்லை.
இப்படியான ஒரு உதவியைத்தான் இசையமைப்பாளும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் தன்னிடம் உதவிகேட்ட ரசிகர் ஒருவருக்கு உடை வாங்க ரூபாய் ஆறு ஆயிரம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜி.வி. பிரகாஷ்க்கு சமூகவலைதளத்தில் மெசேஜ் செய்த ரசிகர், மார்ச் மாதம் டீ-சர்ட் மற்றும் பேண்ட் கொரியர் செய்வதாக கூறினீர்கள். டி-சர்ட் நான் போட்டுக்குவேன். அப்பாக்கு மருந்து அடிக்கும்போது அரிக்கும் அதானால பேண்ட் அவரிடம் கொடுத்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
அதற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், “ என்னிடம் கொடுப்பதற்கு டீ சர்ட் மற்றும் பேண்ட் இல்லை. நான் உனக்கு பணம் அனுப்புகின்றேன். அதனைவைத்து நீங்கள் துணி எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஜி.பே நெம்பர் அனுப்புங்க” எனக் கூறியுள்ளார்.
உதவி கேட்ட ரசிகருக்கு ரூபாய் 6 ஆயிரம் அனுப்பிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, மிகவும் நன்றிகள் அண்ணா. இந்த பணத்தை வைத்து நான் டீ-சர்ட் மற்றும் பேண்ட் வாங்கிக் கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் உதவிகேட்ட ரசிகர் இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ”நான் ஒரு விவசாயி வீட்டு பையன் எனக்கு & எனது தந்தைக்கு உடுத்த உடை வாங்க உதவி செய்த ஜி.வி. பிரகாஷ் குமார் அண்ணாவிற்கு மிக்க நன்றி உடை வாங்க ரூ 6000 உதவி செய்யதார்க்கு நன்றி அண்ணா உங்கள் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன் அண்ணா” எனக் குறிப்பிட்டுள்ளார்.