இந்நிலையில் மேஜிக் செய்கிறேன் என்று கூறி தனது கணவரின் கன்னத்தில் பளார் என்று அவர் அறைவிடும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேஜிக் செய்வதாக கூறி கணவர் தலையில் தண்ணீர் ஊற்றுவது போன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டு பலரும் ரசித்து வருகின்றனர்.
1999-ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் திரைப்படமான டால் என்ற படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினர் நடிகை அனிதா ஹாசநந்தினி. பாலிவுட் உலகில் பிரபல நடிகையாக வலம்வந்த இவர் தமிழில் ரவி ஷங்கர் இயக்கத்தில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான விக்ரமின் சாமுராய் படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழில் ஐந்து திரைப்படங்களில் நடித்த அனிதா இறுதியாக 2011-ஆம் ஆண்டு வெளியான மகாராஜா என்ற படத்தில் தோன்றினார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு இருந்தே அனிதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ஆம் ஆண்டோடு சினிமாவிற்கு பை சொன்ன இவர், தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். சில இணை தொடர்களிலும் அவர் அவ்வப்போது தோன்றுவதுண்டு. 2013-ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை மணந்தார், தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தனது குழந்தை மற்றும் கணவரோடு நேரத்தை செலவிடும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்.