மே 10ம் தேதி கவின் நடித்துள்ள ஸ்டார், சந்தானம் நடித்துள்ள இனிமேல் இங்க நான் தான் கிங்கு மற்றும் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி உள்ளிட்டப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. மறுபக்கம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியான படங்கள் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. மே இரண்டாவது வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.


ஆவேஷம்






பகத் ஃபாசில் நடித்து கடந்த எப்ரல் மாதம் திரையரங்கில் வெளியான படம் ஆவேஷம் . கடந்தாண்டு ரொமான்ச்சம் படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஜித்து மாதவன், இந்த ஆண்டு அதைவிட பெரிய ஹிட் ஒன்றை கொடுத்துள்ளார். ரங்காவாக இப்படத்தில் ஃபகத் ஃபாசில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் , மலையாளம், என இரு மொழிகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இப்படம் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளதைத் தொடர்ந்து அடுத்தபடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. வரும் மே 9 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது ஆவேஷம் .


ரோமியோ


அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி என பலரும் நடித்துள்ள படம் “ரோமியோ”. பரத் தனசேகர் இசையமைத்துள்ள இப்படத்தில் ஃபரூக் ஜெ பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்திருந்தார். கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தவறான விமர்சனங்களைக் கேட்டு யாரும் படத்தை கொண்டாடாமல் போய்விடாதீர்கள் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார் விஜய் ஆண்டனி. தற்போது வரும் மே 10 ஆம் தேதி ரோமியோ படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


கள்வன்






டில்லி பாபு தயாரித்து சக்தி பிலிம் ஃபேக்ட்ரி வெளியிட்டுள்ள கள்வன் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். சமகால வெள்ளிக்கிழமை நாயகன் என அழைக்கப்படும் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இவானா,KPY தீனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கள்வன் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி டெண்டுகொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது