அந்தகன்
பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'அந்தாதூன்' திரைப்படம் தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரஷாந்த் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரசாந்தின் தந்தை இயக்குநர் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். நாளை ஆகஸ்ட் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் பிரசாந்திற்கு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மின்மினி
பூவரசம் பீப்பி , சில்லுக்கருப்பட்டி , எலே ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கியுள்ள படம் மின்மினி. எஸ்தர் அனில் , கெளரவ் கலை , பிரவீன் கிஷோர் , ஹரி கிருஷ்ணன் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா இப்படத்தை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது
கவுண்டம்பாளையம்
நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.
இது குறித்து பேசிய நடிகர் ரஞ்சித் படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல்கள் வந்ததாக நடிகர் ரஞ்சித் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது இப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஃபிர் ஆயி ஹஸீன் தில்ருபா
2021 ஆம் ஆண்டு டாப்ஸி நடித்து ஓடிடியில் வெளியான படம் ஹஸீன் தில்ருபா. த்ரில்லர் படமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. டாப்ஸி , விக்ராந்த் மாஸி , சன்னி கெளஷல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆகஸ்ட் 9 ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படங்கள் தவிர்த்து தலைவாசல் விஜய் நடித்துள்ள லைதவுஸ், பார்க் மற்றும் சூரியனும் சூரியகாந்தியும் , தாய்நிலம் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன