எஸ்.ஜே சூர்யா விஷால் நடித்து வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷாலின் கம்பேக் படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்றால் நடிகர் எ.ஜே சூர்யாவை சொல்லலாம் . சமீப காலங்களில் எஸ். ஜே சூர்யா நடித்து வரும் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படங்களில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை தனது ஸ்டைலில் தனித்துவமானதாக மாற்றி விடுகிறார்  எஸ் ஜே சூர்யா . தொடர் தோல்விப் படங்களை சந்தித்து வந்த நடிகர்களின் கம்பேக் திரைப்படங்களில் எச். ஜே சூர்யாவின் பங்கைப் பார்க்கலாம்.


 


குஷி


 1999 மற்றும் 2000 ஆண்டில் கண்ணுக்குள் நிலவு, நெஞ்சினிலே, மின்சார கண்ணா என விஜய்  நடித்த அடுத்தடுத்தப் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தன. இப்படியான நேரத்தில் தான் விஜய்யை வைத்து குஷி படத்தை  இயக்கினார் எச்.ஜே சூர்யா. சறுக்கி வந்த விஜய்யின் மார்கெட்டை மீண்டும் உயர்த்தியது குஷி திரைப்படம்.


 நண்பன்


வில்லு, சுறா, வேலாயுதம் என அடுத்தடுத்த சுமாரானப் படங்கள் வெளியாக இரண்டாவது முறையாக விஜய்க்கு ராசியான நடிகராக நிரூபித்தார் எச்.ஜே சூர்யா. ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.


மெர்சல்


இதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் எஸ்.ஜே சூர்யா. இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக அவர் நடித்திருந்தார். விஜய் நடித்தப் படங்களில் முதல் முறையாக 250 கோடி வசூல் செய்த படம் மெர்சல்.


மாநாடு


தொடர் தோல்விப்  படங்கள் மற்றும் சில காலம் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் சிலம்பரசன். கிட்டதட்ட எந்த வித ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் வெளியானது . ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் வில்லனாக நடித்த எ.ஜே சூர்யா நடித்த போலீஸ் கதாபாத்திரம் பயங்கர வைரலானது. அவர் சொல்லும் வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு என்கிற டயலாக் எஸ்.ஜே சூர்யாவின் ட்ரேட்மார்க் வசனமானது.


டான்


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார் எஸ்.ஜே சூர்யா. சிவகார்த்திகேயன் நடித்தப் படங்களில் அதிக வசூல் ஈட்டியப் படமாக மாறியது டான்.


மார்க் ஆண்டனி


தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.