ஆலியா பட், தீபிகா படூகோன் உட்பட பல்வேறு நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.


ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டம்


ரிலையன்ஸ் குழுமத்தின்  தலைவர் முகேஷ்  - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.


பிரபல ஹாலிவுட் பாப் பாடகியான ரிஹானாவின் இசை நிகழ்ச்சியோடு கோலாகலமாக தொடஙகிய இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், பில் கேட்ஸ், தோனி , சச்சின் டெண்டுல்கர் உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். திரையுலகைப் பொறுத்தவரை இந்திய திரைப்படத் துறையின் உச்சநட்சத்திரங்கள் தங்களது குடும்பத்தும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். குறிப்பாக நடிகைகள் பலர் பல லட்சம் மதிப்புள்ள ஆடை அலங்காரத்துடன் தோன்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. 


கியாரா அத்வானி






பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இந்த நிகழ்ச்சிக்கு மலர் பதித்த கருப்பு நிற பாடிகான் (Bodycon) கெளன் அணிந்து வந்திருந்தார். அவருடன் அவரது கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இந்த ஆடை அணிந்தபடி தனது புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவர்.


 கரீனா கபூர்




பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது கணவர் சைஃப் அலிகான் மற்றும் மகனுடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகைத் தந்தார். பாலிவுட்டின் ஆஸ்தான பேஷன் டிசைனர்களில் ஒருவரான தருண் தஹிலியானி வடிவமைத்த உடையை அவர் இந்த நிகழ்வில் அணிந்திருந்தார். இவை தவிர்த்து வைரம் பதிக்கப் பட்ட சோக்கரை கழுத்திலும் க்ரிஸ்டல் பதிக்கப் பட்ட காதணிகளை அவர் அணிந்திருந்தார். அது வெளிப்படையாக தெரியும்படி தனது தலைமுடியை ஒருபக்கமாக ஒதுக்கியும் விட்டிருந்தார்.


தீபிகா படூகோன் 


  நடிகை தீபிகா படூகோன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் ஈர்த்த பிரபலங்களில் தீபிகா ரன்பீர் ஜோடி முதன்மையானது. கருப்பு நிறத்தில் சாடின் பட்டுத்துணியால் செய்யப்பட்ட மிடி  டிரஸ் அணிந்து வந்திருந்தார். கெளரி மற்றும் நைனிகா இந்த ஆடையை வடிவமைத்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேல் தனது கூந்தலை பாதிக்கு மேல் சுருளச் செய்து அதில் ஹேர் போ ஒன்று மாட்டியிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.


ஆலியா பட்




ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்கள். ஆலியா பட் ஊதா நிற வெல்வெட் பாடிகான் கெளன் அணிந்து வந்திருந்தார். பார்ப்பதற்கு ஒரு ஊதா நிற வைரம் போல் அவர் இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்கள்