ஜெனிலியா:
தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் , பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெனிலியா தனது உடல் பருமனை குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஜெனிலியா 6 வாரத்தில் நாங்கு கிலோ எடையை குறைத்துள்ளார்.6 வார உடற்பயிற்சி சவாலை தேர்வு செய்தபோது அவர் 59.4 கிலோ எடையுடன் இருந்தார், தற்போது 55.1 கிலோ எடையுடன் இருக்கிறார்.
ஜெனிலியா பகிர்ந்த வீடியோ :
உடல் எடையை குறைத்த ஜெனிலியா அந்த பயணம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். அதில் ““நான் நிறைய சந்தேகங்களுடனும், பாதுகாப்பின்மையுடனும் தொடங்கினேன், ஆனால் இன்று இலக்கை எட்டிவிட்டேன், நான் அதிக நம்பிக்கையுடனும் நேர்மையாகவும் உழைத்தேன் “ என குறிப்பிட்டுள்ளார். வீடியோவில் ஜெனிலியா தனது ஃபிட்னஸ் முன்னேற்றத்தை வாரம் 1 முதல் வாரம் 6 வரை காட்டியிருக்கிறார்.
உடற்பயிற்சி பற்றி ஜெனிலியா :
”உடற்தகுதி என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் நான் மனமுடைந்து போகாமல் இருக்க விரும்புகிறேன், நான் சீட் டயட் செய்ய ஒருபோதும் விரும்பியதில்லை.அதே சமயம் நாம் வழக்கமான உணவை சாப்பிட முடியாது என்றும் எனக்கு தெரியும். ஒவ்வொரு முறையும் என் அளவு அதிக எடையைக் காட்டும் போது அதைக் குறித்து குற்ற உணர்ச்சியில்லாமல், அதை வெளிப்படுத்தவும் விரும்புகிறேன், உடற்தகுதியில் வெறும் எடை குறைப்பு மட்டுமல்ல .மாறாக தசை வளர்ச்சி, சுறுசுறுப்பு, ஃபிளக்ஷிபிலிட்டியும் தேவை.” என்றார்.