இந்தியாவில் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வழக்கம் போல நெட்டிசன்கள் தங்கள் வேலையை மீம்ஸ்(Friendship Day 2023 Memes) மூலமாக காட்டி வருகின்றனர்.
ஈக்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, மெக்சிகோ, வெனிசுலா மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் பிப்ரவரி 14 ஆம் தேதி தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் ஏப்ரல் 16 ஆம் தேதியும், சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் 3வது வாரமும் கொண்டாடப்படுகிறது. இதேபோல் உக்ரைனில் ஜூன் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
வெனிசுலா, பாகிஸ்தான், பொலிவியா, நேபால், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் ஜூலை மாதம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் சர்வதேச நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
நண்பர்கள் தினம்
எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நண்பன் துணை இருந்தால் அசால்ட்டாக எதிர்கொள்ளலாம் என சொல்வார்கள். ஆனால் உண்மையில் நமக்கு பிரச்சினை ஏற்படுவது நண்பர்களால் தான். (நான் சொல்லல.. மீம்ஸ்ல சொன்னாங்க). ஆனால் எந்த உறவும் இல்லாமல் கூட ஒருவரின் வாழ்க்கை கடந்து விடலாம். ஆனால் நண்பர்கள் இல்லாமல் வாழ்க்கை முழுமை பெறாது என்பதே உண்மை.
காலத்திற்கு ஏற்ப நட்பின் நபர்கள் வேறுபடுவார்களே தவிர, அந்த உறவு என்றும் விட்டுப்போகாது. சந்தோசமான நிலையிலும், துன்பமான நிலையில் நாம் தேடுவது நண்பர்களை தான்.கடவுளை காட்டிலும் மிகவும் புனிதமாக நட்பைபு மதிக்கப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் தமிழில் ஏகப்பட்ட நட்பு சார்ந்த படங்களும், பாடல்களும் எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இன்றளவு கொண்டாடப்படுகிறது.
தளபதி, நட்புக்காக, ப்ரண்ட்ஸ், புன்னகை தேசம், பிரியமான தோழி, நண்பன், களத்தில் சந்திப்போம், நட்பே துணை என ஏகப்பட்ட படங்கள் தமிழில் இன்றைய காலக்கட்ட ரசிகர்களால் நினைவூட்டப்படுகிறது.
இப்படி ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் தினம் என்றால் படம், பாடல்கள், கவிதைகள் நியாகம் வருவதைப் போன்று சமீப காலமாக மீம்ஸ்களும் ரெக்கை கட்டி பறக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம். இந்த மீம்ஸ்களை பதிவிட்ட சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு பாராட்டுகள்.