மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சும்மா தனது அநாயசமான நடிப்பால் வியக்க வைப்பவர். இவர் அண்மையில் நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் கேப்ஷனாக நம்மை ஊக்குவிக்கும் நண்பர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ப்ரித்விராஜ் ஜோதிகாவுக்கு ஜோடியாக ராதா மோகனின் மொழி படத்தில் நடித்திருப்பார். அந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம்.
பிரித்விராஜ் சுகுமாரன் பிரபலமான நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமான நடிகர் ஆனார்.
இவர் 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்விராஜ் அக்டோபர் 16, 1982 ஆம் ஆண்டு திருவனந்தபுரம், கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாறன் ஒரு நடிகர். தாயார் மல்லிகா சுகுமாறனும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மனைவி பூர்ணிமா இந்திரஜித்தும், இவரும் சில மலையாளம், தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.
பிஜு மேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள படம் 'அய்யப்பனும் கோஷியும்'. பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம், திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெற வைத்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.