திருமணம் என்பது சீரியஸ் என்பதை கடந்து காமெடி நிகழ்ச்சியாக சமீபத்தில் மாறிவருகிறது. போட்டோ ஷூட் என்கிற பெயரில், கற்பனை அனைத்தையும் மொத்தமாக இறக்கி, அவர்கள் அடிக்கும் லூட்டியாக இருக்கட்டும். மணக்கோலத்தில் மேடையிலேயே குத்தாட்டம்போடுவதாக இருக்கட்டும். வித்தியாசமான ஊர்வலங்களாக இருக்கட்டும். எல்லாமே உணர்வுபூர்வமான திருமண பந்தந்தை, கேலிக்கூத்தாக்குகிறார்கள் என்ற ஒரு சாரார் சாடும் அளவிற்கு மாறிவிட்டது.
திருமணம் ஒரு மகிழ்ச்சியான விசயம், அதை மேலும் மகிழ்ச்சியாக்க தான் இது போல செய்கிறோம் என விளக்கமளிக்கிறது இன்றைய தலைமுறை. இது தலைமுறை இடைவெளியாக கூட இருக்கலாம்.
எந்த காலகட்டமாக இருந்தாலும் ஒரு விசயம் மட்டும் திருமணத்தில் மாறாது. அது நண்பர்கள் லூட்டி. நண்பர்கள் அடிக்கும் லூட்டிக்கு எப்போதுமே தனி சுவாரஸ்யம் தான்.
அப்படி ஒரு சுவாரஸ்யம் தான் இந்த வீடியோவில் உள்ளது. பொதுவாக திருமணத்திற்கு வரும் நண்பர்கள், பரிசு பொருள் கொடுத்து கலாய்ப்பது, மேடையில் நடனமாட வைத்து கலாய்ப்பது, இப்படி இன்ன பிற வழிகளில் எல்லாம் மணமக்களை கலாய்ப்பார்கள்.
இங்கு நண்பர்கள் ஒரு படி மேலே போய், முதலிரவில் இருக்கும் நண்பரை தட்டி எழுப்பி வேறு லெவலில் இறங்கி செய்திருக்கிறார்கள். மணமக்கள் தனிமை அறையில் தாம்பத்யத்தை தொடங்கிக் கொண்டிருந்த சமயம் அது. அவர்களின் அறை ஜன்னலில், பெரிய ஸ்பிக்கரில் பாடலை ஒலிக்கச் செய்கிறார்கள் நண்பர்கள். ஒரே சத்தம், ஆட்டம், பாட்டம் என நள்ளிரவில் அந்த பகுதியே பார்ட்டி மூடுக்குச் செல்கிறது. அந்த சத்தத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட எழுந்து விடுகிறார்கள்.
சம்மந்தப்பட்ட அறையில் இருக்கும் மாப்பிள்ளை எழாமலா இருப்பார். மனைவியோடு ஜன்னலை திறந்து பார்க்கிறார். ‛அடப்பாவிகளா... உங்களுக்கு சரக்கு வாங்கி கொடுத்து... எனக்கு நானே சூன்யம் வெச்சுட்டேனே...’ என்பது போல அவர் மழுப்பல் சிரிப்போடு மனைவியுடன் பேந்த பேந்த முழிக்கிறார்.
‛யார்ரா... இவனுங்க...’ என்பது போல, மணப்பெண், தூரத்தில் நின்று பார்க்கிறார்.
‛போய் தொலைங்கடா..’ என இருவரும் சிரித்த முகத்தில் உடல் மொழியில் பேசியதை புரிந்து கொண்ட நண்பர்கள் குழு, ஜன்னல் கதவை மூடிவிட்டு, அங்கிருந்து புறப்படுகிறது. இது ஒன்று தான் இதுவரை பார்க்காமல் இருந்தது. அதையும் செய்து முடித்துவிட்டார்கள் என்ற சமூகவலைதளத்தில் சிலர் கலாய்சி கொண்டிருக்கின்றனர். அறைக்குள் போகாத வரை நல்லது என சிலர் கிண்டலும் அடிக்கிறார்கள். எது எப்படியே கொண்டாட்டம் என்கிற பெயரில், எல்லை தாண்டாமல் இருந்தால் சரி. ஆனால் எல்லை மீறுவதாகவே தெரிகிறது.