வாழ்வில் தனித்துவமாக இயங்கும் பெண்கள் இந்த சமூகத்தால் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் ட்ராமா வடிவில் எடுத்துக்கூறிய வெப்சீரிஸ் ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ். இந்த சீரிஸின் மூன்றாவது சீசனிற்கான ரிலீஸ் டேட் வெளியாகியுள்ளது. 


 


ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!


நான்கு பெண்களின் வெவ்வேறு வாழ்வியல் சூழலைகளையும்,  தினசரி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அதை ஒன்று சேர்ந்து அவர்கள் சமாளிக்கும் விதத்தையும் அழகாக எடுத்துச் கூறும் வெப் சீரிஸ்தான் ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சீரிஸின் கடைசி சீசன் வெளியானது. அதன் பிறகு, அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டிற்காக காத்துக்கிடந்தது போல, இந்த சீரிஸ் குறித்த அப்டேட்டிற்கும் ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கிடந்தனர். 


ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸின் முதல் சீசன் 2019ஆம் ஆண்டு வெளியானது. 10 எபிசோடுகளே அடங்கிய இந்த தொடர், தாமினி, சித்தி, அஞ்சனா, உமங் ஆகியோரை சுற்றி அமையும் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்திய சமூகத்தில், தனக்கு எது வேண்டும் வேண்டாம் என தீர்மானித்து நடந்துக் கொள்ளும் பெண்களை இந்த சமூகத்தால் எப்படி பாரக்கப்படுகிறார்கள் என்றும், ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிரிப்பூட்டும் வகையிலும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இத்தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. 


பெண்கள் இத்தொடர் மூலம் சுதந்திரத்தை தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்றும், இது சமூகத்திற்கே ஒழுக்கக்கேடான சீரிஸ் என கூறி இதனை சிலர் முடக்க முயற்சித்தனர். ஆனால், 2020ஆம் ஆண்டு போடப்பட்ட லாக் டவுனில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக இதுவும் மாறி விட்டது. இதனால், இத்தொடர், அமேஸான் ப்ரைமில் ஸ்ட்ரீமாகும் வெப் தொடர்களுள் ஒன்றாக மாறியது. 




இத்தொடரின் அஞ்சனா மேனன் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை க்ரித்தி குல்ஹரி அமிதாப் பச்சன், தாப்சி ஆகியோருடன் பிங்க் படத்தில் இனைந்து நடித்து பிரபலமானவர். இவர் மட்டுமன்றி, உமங் சிங் எனும் கதாப்பாத்திரத்தில வரும், வி ஜே பானியும், வலிமை படத்தில் சாரா எனும் கதாப்பாத்திரத்தில் வந்து தமிழ் மக்களிடையே அறிந்த முகமாக மாறியவர். 


 






சீசன் 3-யின் ரிலீஸ் டேட்:


ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் தொடர் முடிக்கப்பட்ட போது, ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்துடன் முடிந்தது. அடுத்தது என்ன? என்ற கேள்வியுடன் முடுக்கப்பட்ட இத்தொடரின் அடித்த சீசனை வெளியிடுவதில் நீண்ட நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது. இறுதியாக இந்த சீரிஸ் குறித்த அப்டேட் ஒன்றை அமேஸான் ப்ரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


இன்று வெளியிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இம்மாதம் 21ஆம் தேதி ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் தொடரின் 3ஆவது சீசன் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இத்தொடரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.