பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் production நிருவனத்தின் அடுத்த திரைப்படத்தின் First Look போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது. பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ள இந்த படத்திற்கு 'ரைட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.  






நீலம் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கவுள்ள மூன்றாவது திரைப்படம் இதுவென்பது குறிப்படத்தக்கது. 2003ம் ஆண்டு வெளியான தனுஷின் திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான திரு. சுப்ரமணியம் சிவா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 


நாளை ரைட்டர் படத்தின் First look வெளியாகவுள்ள நிலையில் படக்குழு குறித்த முழு தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.