Joker: Folie à Deux:  டிசி காமிக்ஸை தழுவிய ஜோக்கர் 2 திரைப்படம், வரும் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 


ஜோக்கர் 2 டிரெய்லர் வெளியீடு:


டிசி காமிக்ஸ் கதைகள் மூலம் புகழ்பெற்ற ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட, ஜோக்கர் படத்தின் முதல் பாகம் 2019ம் ஆண்டு வெளியாக் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம், வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜோக்கர்: ஃபோலி எ டியூக்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.


டிரெய்லர் சொல்வது என்ன?


முதல் பாகத்தின் முடிவில் டிவி தொகுப்பாளரை கொன்றுவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஜோக்கர் / ஆர்தர் ஃப்ளெக் மகிழ்ச்சியாக நிற்பதை போன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் டிரெய்லரில், ஜோக்கர்/ ஆர்தர் ஃப்ளெக் (வாக்கின் பீனிக்ஸ்) ஆர்கம் அசைலம் எனப்படும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனநல பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக ஹார்லி குவின் (லேடி காகா) இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் பேசி, பழகுவது மற்றும் அவர்களிடையே காதல் மலர்வது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒருகட்டத்தில் ஹார்லி குவின் கதாபாத்திரம் லேடி ஜோக்கராகவே மாறுகிறது. இதனிடையே, ஆர்தர் ஃப்ளெக்கின் ஜோக்கர் எனும் அடையாளத்தை வேறு சில நபர்கள் அபகரிக்க முயல்கிறன்றனர். இதனை ஆர்தர் ஃப்ளெக் மற்றும் ஹார்லி குவின் ஆகியோர் சேர்ந்து எப்படி தடுத்தனர் தங்களது அடையாளத்தை மீட்டனர் என்பதே படத்தின் மூலக்கதை.


தரமான டிரெய்லர்:


அநாவசியமான கிராஃபிக்ஸ் எதுவும் இல்லாமல், முதல் பாகத்தை போன்றே மிகவும் இயல்பாக நம்பும்படியாக இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய டாட் பிலிப்ஸ் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். வாக்கின் பீனிக்ஸ் மீண்டும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லேடி காகாவின் நடிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், ஏற்கனவே ஹார்லி குவின் கதாபாத்திரதம் மூலம் கவனம் ஈர்த்த, மார்கட் ராபி அளவிற்கு இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


வசூலை வாரிக் குவித்த ஜோக்கர்:


சமூகத்தால் தனக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும், மனதில் அடக்கிக் கொண்டிருந்த ஒரு சாது மிரண்டு எழுந்தால் என்ன நடக்கும் என்பதே ஜோக்கர் முதல் பாகத்தின் கதை. இப்படம் திரில்லர் ஜானரில் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக ஜோக்கர் கதாபாத்திரம் என்றாலே பலருக்கும், நோலன் டிரையாலஜியில் வந்த ஹீத் லெட்ஜர் தான் நினைவுக்கு வருவார். ஆனால், அவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வாக்கின் பீனிக்ஸ் நடிப்பில் மிரட்டியதாக ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டினர். 


அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 11 பிரிவுகளின் கீழ் ஜோக்கர் படம் ஆஸ்கர்  விருதை வென்று சாதனை படைத்தது. அந்த வகையில் சிறந்த நடிகருக்கான விருதை வாக்கின் பீனிக்ஸ் பெற்றார். 17 வயது நிரம்பியவர்கள் மட்டுமே ஜோக்கர் படத்தை பார்க்க முடியும் என்ற,  'ஆர்' ரேட்டிங் பெற்றிருந்தாலும் ஜோக்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 1 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது.