'கரகாட்டக்காரன்' திரைப்படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களின் நீங்காத ஒரு நடிகையாக பிரபலமானவர் நடிகை கனகா. மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


 



 


சினிமாவில் இருந்து விலக காரணம் :


பாடகியாக சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த நடிகை கனகா கடைசியில் நடிகையாக மாறினார். பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குனரான கங்கை அமரன் 1989ம் ஆண்டு இயக்கிய திரைப்படம் 'கரகாட்டக்காரன்'. கிராமிய கதையை பின்னணியாக கொண்டு வெளியான இப்படத்தில் நடிகர் ராமராஜன் ஜோடியாக கனகா நடித்த அப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக மாறி வெற்றி பெற்றது. அப்படத்திற்கு கிடைத்த அமோகமான வரவேற்பால் கரகாட்டக்காரன் கனகா எனும் அடையாளத்திற்கு சொந்தமானார். அந்த வெற்றியை தொடர்ந்து சில படங்களில் நடித்த கனகா கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.


இதற்கு இடையில்  ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்த அவர்  உடல் நலம் பாதிக்கப்பட்டு தவித்து வந்தார். அந்த வகையில் சென்ற ஆண்டு நடிகை கனகா மீண்டும் நடிக்க விருப்பப்படுவது குறித்த வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அதற்காக தனது நடை, உடை, தோற்றம் என அனைத்தையும் மாற்றி கொண்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த காலத்திற்கேற்ப தன்னை தயார் படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 


 






 


கனகா வீட்டில் தீ விபத்து :


நடிகை கனகா தனது தந்தையுடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை திடீரென வீட்டில் இருந்து புகையும் நெருப்பும் பயங்கரமாக பரவ வீட்டின் அருகில் கூடியிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்; தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


நடிகை கனகாவின் வீட்டில் ஏராளமான பொருட்கள் துணிமணிகள் எறிந்த நாசமாகி இருந்தன. இந்த தீ விபத்து குறித்து விசாரித்ததில் பூஜை அறையில் எறிந்த விளக்கில் இருந்து தீப்பொறி அருகில் இருந்த பொருட்களில் பட்டு தீ பரவியதாகவும் அதை கவனிக்க தவறியதால், தீ மளமளவென அனைத்து இடங்களுக்கு பரவி எல்லா பொருட்களும் எறிந்து சாம்பலாக்கிவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சில நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.