நடிகர் பவன் கல்யாண், காரின் மேலே அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது. அது சம்பந்தமாக பவன் கல்யாண் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. 


 



 


பவர் ஸ்டாருக்கு வந்த சிக்கல் :


ஜனசேனா தலைவரும், பிரபல தெலுங்கு திரையுலகின் நடிகருமான பவன் கல்யாணுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தெலுங்கு திரையுலகின்  'பவர் ஸ்டார்' என்று டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் பவன் கல்யாண், ஆந்திராவின் குண்டூர் சாலையில் பயணம் செய்தது அவரை பெரும் சிக்கலில் கொண்டு சென்று  நிறுத்தியுள்ளது.  


போக்குவரத்துக்கு மீறல் :


நவம்பர் 5ம் தேதி ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் காரின் மேலே அமர்ந்தபடி பயணம் செய்தார். அவர் காரின் மேலே அமர்ந்து கொண்டிருக்க, பலர் அவர் காரை சுற்றி தொங்கியப்படி பயணித்தனர். அவர் செல்லும் காரை தொடர்ந்து அவரது ரசிகர்கள் என பலரும் பைக்கில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவரது ஆதரவாளர்கள் கார் மற்றும் பைக்கில் அதிக வேகத்தில் பயணம் செய்ததோடு உற்சாகமாக கத்திக் கொண்டு பின்தொடர்ந்தனர். சமூக வலைத்தளங்களில்  மிகவும் வைரலாக பரவிய இந்த வீடியோ பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 


 






பவன் கல்யாணின் கார் பயணத்தின் காரணம் : 


சமீபத்தில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பல வீடுகள் இடிக்கப்பட்டது. அதனால் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பவன் கல்யாண் காரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தான் இந்த வீடியோ ஏடுகபைட்டதாகவும் கூறப்படுகிறது.


பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு :


 






இந்த திரைப்பட ஸ்டண்ட் ரேஞ்சில் இருந்த அந்த கார் பயணம் 'போக்குவரத்து விதிகளை முற்றிலும் மீறிய செயல்’ என கூறி போலீசார் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். வேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காகவும், பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் தகவலின் படி பவன் கல்யாண் மீது ஐபிசி 336, 279 பிரிவுகளின் கீழ் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.