டிசம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.


ஃபைட் கிளப்


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் வழங்கும் FIGHT CLUB திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. 'உறியடி' விஜய் குமார், நடிகை மோனிஷா மேனன், இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.







கண்ணகி


அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஹாலினி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கண்ணகி. யஹ்வந்த் கிஷோர் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவும் படத்தொகுப்பை சரத்குமாரும் கையாண்டுள்ளார். கார்த்திக் நேத்தா இப்படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது கண்ணகி திரைப்படம்.


சபாநாயகன்


அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். இத்திரைப்படத்தில், நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், வியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.


ஆலம்பனா


வைபவ் ரெட்டி, பார்வதி நாயர், காளி வெங்கட் மற்றும் கபீர் துஹான் சிங் , யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ஆலம்பனா திரைப்படத்தை பாரி கே விஜய் இயக்கியுள்ளார்.


பிற படங்கள்


இவை தவிர்த்து தீதும் சூதும், பாட்டி சொல்லைத் தட்டாதே, அகோரி, ஸ்ரீ சபரி அய்யப்பன் உள்ளிட்டப் பிற படங்களும் டிசம்பர் 15 அம் தேதி வெளியாக இருக்கின்றன.